உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வாங்கும் இந்திய குபேரர்கள் யார் தெரியுமா? இந்திய தொழில் அதிபர் பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா சமீபத்தில் உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை, சுவிட்சர்லாந்தில் ₹1,649 கோடிக்கு வாங்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெனீவாவிலிருந்து 15 நிமிடங்களில் உள்ள ஜிங்கின்ஸ் கிராமத்தில் உள்ள வாட் மாகாணத்தில் அமைந்துள்ள வில்லா வாரி, ஆல்ப்ஸ் மலையின் பனி மூடிய சிகரங்களின் பின்னணியில் அமைந்துள்ளது.  


தொழில் அதிபர் பங்கஜ் ஓஸ்வாலின் மகள்களான வசுந்திரா மற்றும் ரிடியின் பெயரால் வில்லா வரி (Villa Vari) என்று பெயரிடப்பட்டது, சொத்து மதிப்பு 200 மில்லியன் டாலர்கள் (தோராயமாக ரூ. 1,649 கோடி) ஆகும்.  


கிரேக்க தொழிலதிபர், சமூகவாதியான கிறிஸ்டினா ஓனாசிஸுக்கு சொந்தமான இந்த வீடு, உலகப் புகழ்பெற்ற கட்டட வடிவமைப்பாளர் ஜெஃப்ரி வில்கஸின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டது.


பிரபல கட்டட வடிவமைப்பாளர் ஜெஃப்ரி வில்கஸ், ஓபராய் ராஜ்விலாஸ், ஓபராய் உடைவிலாஸ், மாண்டரின் ஓரியண்டல் மற்றும் லீலா ஹோட்டல்களை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | உச்சத்தில் முகேஷ் அம்பானி... திவாலான தம்பி - அனில் அம்பானியின் 5 மிகப்பெரும் தவறுகள்


சுவிட்சர்லாந்தில் உள்ள இந்த சொகுசான ஆடம்பரமான வீட்டிற்கு 200 மில்லியன் டாலர் அல்லது 1,649 கோடி ரூபாய் செலவானது. இந்த வீடு, உலகின் 10 விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
 
“இந்தியர்கள், வெளிநாட்டில் வசித்தால், நமது கலாச்சாரம், குறிப்பாக அழகியல், உணவு மற்றும் மக்களைப் பற்றிய சிறிய விஷயங்களை தவறவிடுவது சகஜம். இந்தியாவிலிருந்து விலகி ஒரு சிறிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது எனது குடும்பத்தின் கனவாக இருந்தது, அதில் நாங்கள் இப்போது வெற்றி பெற்றோம் என்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி” என்று ரிடி ஓஸ்வால் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.



இந்த வீட்டின் மாளிகையில் உள்ள சுவரின் மேற்பகுதியில், ஜெய்ப்பூரின் ஆம்பர் அரண்மனையில் இருப்பதுபோல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது சிக்கலான செதுக்கப்பட்ட வடிவமைப்பாகும். துருக்கி மற்றும் மொராக்கோவில் பிரபலமான சரவிளக்குகள் லிருந்து பெறப்பட்டுள்ளன.இந்த ஆடம்பர மாளிகையில் பொருத்தப்பட்டுள்ளது.


இந்த வில்லாவில் ஒரு தனியார் உடற்பயிற்சி கூடம், தங்கம் பதிக்கப்பட்ட ஸ்பா மற்றும் பெரிய பிரஞ்சு ஜன்னல்கள் என உலகின் மிகவும் சிறப்பான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தோட்டங்கள் மற்றும் பனி மூடிய மலைகளின் நடுவே அமைந்து ரம்யமான தோற்றத்தை கொடுக்கும் அழகான வீடு இது.  


மேலும் படிக்க | வெள்ளை மாளிகை விருந்தில் இந்தியப் பிரதமருடன் நீதா முகேஷ் அம்பானி & சுந்தர் பிச்சை


பங்கஜ் ஓஸ்வால் மற்றும் குடும்பம்
தொழிலதிபர் அபய் குமார் ஓஸ்வாலின் மகன் பங்கஜ் ஓஸ்வால், அக்ரோ மில்ஸ் மற்றும் ஓஸ்வால் கிரீன்டெக் நிறுவனர்ஆவார். பங்கஜ் ஓஸ்வால் தலைமையிலான ஓஸ்வால் குரூப் குளோபல், பெட்ரோ கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், உரங்கள் மற்றும் சுரங்கத் தொழிலில் ஆர்வம் கொண்டுள்ளது. .


ஓஸ்வால் குடும்பத்தின் சொத்தின் நிகர மதிப்பு $3 பில்லியன், அதாவது தோராயமாக ரூ. 247,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கோடீஸ்வர தம்பதிகளான பங்கஜ், தனது மனைவி ராதிகா, இரண்டு மகள்கள் வசுந்தரா மற்றும் ரிதியுடன் என உடன், கடந்த 10 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வசித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக, இந்த குடும்பம், ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தனர்.


வசுந்தரா, நிதித்துறையில் கல்வி பயின்ற பிறகு, பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராகவும், ‘ஆக்சிஸ் மினரல்ஸ்’ நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் ஆனார்.


ரிடி லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் படித்து வருகிறார், மேலும் இந்தோ-மேற்கத்திய பாப் ஸ்பேஸில் வெற்றிகரமான பாடகர்-பாடலாசிரியராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.


மேலும் படிக்க | இந்த ரகசியங்களை வங்கிகள் ஒருபோதும் நம்மிடம் சொல்ல மாட்டார்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ