புதுடெல்லி: கடந்த பத்தாண்டுகளில், 100 பில்லியனுக்கும் அதிகமான பயன்பாடுகளில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் ஆதார் அட்டையை அங்கீகாரத்திற்காக பயன்படுத்தியுள்ளனர் என்று இந்திய அரசு அறிக்கை ஒன்றை சில நாட்களுக்கு முன்னதாக வெளியிட்டது. இதன் பொருள், மக்கள் ஆதார் அட்டையை முழுமையாக நம்புகிறார்கள் என்று சொல்லப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் டிஜிட்டல் ஐடி


இந்தியாவின் ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறிய மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸின் அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆதாரில் தனியுரிமை தொடர்பான கவலைகள் இருப்பதாக மூடிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மூடிஸ் அறிக்கைக்கு இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. செப்டம்பர் 21 அன்று மூடிஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அரசு எக்ஸ் சமூக ஊடகத்திலும் விளக்கம் கொடுத்துள்ளது.



ஆதார் குறித்து பொய்யான புகார்கள் கூறப்படுகின்றன
உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் ஐடியான ஆதார் குறித்து ஒரு அறிக்கையில் தவறான கூற்றுக்கள் கூறப்படுகின்றன என்று அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மூடிஸ் அறிக்கையில், ஆதாரின் நம்பகத்தன்மை தரவு அல்லது ஆராய்ச்சியை மேற்கோள் காட்டாமல் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மூடிஸ் அறிக்கையில் ஆதார் எண் குறித்த தகவலும் சரியில்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இதுவரை வழங்கப்பட்ட ஆதார் எண் 1.2 பில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது, இது தவறு என்று மூடிஸ் அறிக்கை கூறுகிறது. 


பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களின் பயன்பாடு


பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, இந்தியாவின் வெப்பமான, ஈரப்பதமான காலநிலையில் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு சேவை மறுப்புக்கு வழிவகுப்பதாக அறிக்கை கூறுகிறது, இது இந்தியாவின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) பயனாளிக்கான அங்கீகாரம் குறித்த தகவல். இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், MNREGA தரவுத்தளத்தில் ஆதார் பதிவு செய்யப்பட்டிருப்பது தொழிலாளர்களின் பயோமெட்ரிக் மூலம் அங்கீகரிக்கப்படாமல் செய்யப்பட்டது என்பது அறிக்கை எழுதியவருக்குத் தெரியாது என்றும், இத்திட்டத்தில், தொழிலாளர்களின் ஊதியம் நேரடியாக அவர்களது கணக்கில் சேர்க்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஆதார் இணைப்பு முதல் சேமிப்பு திட்டம் வரை... செப். 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டிய சில வேலைகள்!


ஆதார் தரவுத்தளத்தில் இன்று வரை எந்தக் குறையும் கண்டறியப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,  ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்கள், இந்தியாவின் ஆதார் முறைமையை பாராட்டியுள்ளன. சில நாடுகள் தங்கள் நாட்டில் இதே போன்ற டிஜிட்டல் ஐடி முறையை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை அறியவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.


மேலும், மூடிஸ் அறிக்கையானது, கேள்விக்குரியது என்றும், அதில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு ஆதரவாக முதன்மை அல்லது இரண்டாம் நிலை தரவு அல்லது ஆராய்ச்சியை மேற்கோள் காட்டவில்லை என்றும் அரசு கூறுகிறது. இந்த அறிக்கையை எழுதியவர்கள் மேற்கோளிட்டு காட்டும் பிரச்சினைகள் தொடர்பான உண்மைகளை அறிய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஒரே குறிப்பு, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பற்றியது. இருப்பினும், அறிக்கையானது 1.2 பில்லியன் ஆதார்களின் எண்ணிக்கையை தவறாக மேற்கோளிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும், முக அங்கீகாரம் மற்றும் கருவிழி அங்கீகாரம் போன்ற பல வழிமுறைகள் மூலம் பயோமெட்ரிக் சமர்ப்பிப்பு சாத்தியமாகும் என்பதை அறிக்கை புறக்கணிக்கிறது. கூடுதலாக, மொபைல் OTP இன் விருப்பமும் பல செயலிகள் உள்ளது என்பதையும் மூடிஸ் அறிக்கை புறக்கணித்துவிட்டதாகவும் அரசு தெளிவுபடுத்தியுள்ள்து.


மேலும் படிக்க | PPF: பிபிஎஃப்பில் இருந்து சுலபமாக கடன் பெற டிப்ஸ்! வட்டியும் குறைவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ