இரு சக்கர வாகனங்களை ரயில் மூலம் அனுப்புவது எப்படி; முழு விபரம் இதோ
படிப்பு அல்லது வேலை மாற்றம் காரணமாக மக்கள் தங்கள் நகரத்தை விட்டு வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில், ரயில் போக்குவரத்து மூலம் பைக்கை அனுப்புவது மிகவும் மலிவான சிறந்த வழி என்பது குறிப்பிடத்தக்கது.
படிப்பு அல்லது வேலை மாற்றம் காரணமாக மக்கள் தங்கள் நகரத்தை விட்டு வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில், பல நேரங்களில் தங்கள் பைக் அல்லது ஸ்கூட்டர்களை தொலை தூரத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருக்கும். ஆனால் இந்திய ரயில்வே மூலம் உங்கள் பைக் அல்லது ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களை மற்ற நகரங்களுக்கு எப்படி அனுப்புவது என்பதை அறிந்து கொள்ளலாம். ரயில் போக்குவரத்து மூலம் பைக்கை அனுப்புவது மிகவும் மலிவான சிறந்த வழி என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலில் எந்தவொரு பொருட்களையும் கூரியர் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. முதலில் சாமான்கள் அல்லது பார்சல்கள் வடிவில் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். லக்கேஜ் என்றால் ரயிலில் பயணம் செய்யும் போது நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய சாமான்கள். ஆனால் பயணத்தின் போது சாமான்களை எடுத்துச் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உண்டு. அதேசமயம், பார்சல் மூலம் நீங்கள் விரும்பும் இடத்திற்கு அனைத்து விதமான பொருட்களையும் அனுப்பலாம்.
நீங்கள் பைக்கை பார்சல் மூலம் வேறு ஊர்களுக்கு அனுப்ப விரும்பினால், இதற்காக நீங்கள் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஸ்டேஷனில் ஒரு பார்சல் கவுன்டர் இருக்கும். அங்கே, நீங்கள் அது தொடர்பான முழுமையான தகவல்களை பெறலாம். பைக்கை அனுப்பும் முன் சில ஆவணங்கள் தயார் செய்ய வேண்டும். தேவையான அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களின் அசல் நகல் மற்றும் புகைப்பட நகல் இரண்டையும் உங்களுடன் வைத்திருக்கவும். அதன் பிறகு, பைக்கை பார்சல் செய்வதற்கு முன் அதன் பெட்ரோல் டேங்க் சரிபார்க்கப்படும்.
மேலும் படிக்க | Good News: விரைவில் விமானத்திலும் இணைய வசதியை அனுபவிக்கலாம்
நீங்கள் பைக்கை அனுப்ப விரும்பும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்யுங்கள். பைக்கின் பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் இரண்டும் இருக்க வேண்டும். உங்கள் அடையாள அட்டை - ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்றவையும் தேவைப்படும். பைக்கை நன்கு பேக் செய்ய வேண்டும், குறிப்பாக ஹெட்லைட் ஆகியவற்றை உடையாத வகையில் பேக் செய்ய வேண்டும். பைக்கில் பெட்ரோல் இருக்கக்கூடாது. காரில் பெட்ரோல் இருந்தால், 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
ரயில் மூலம் பொருட்களை அனுப்புவதற்கு எடை மற்றும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில்வே என்பது பைக்குகளைக் கொண்டு செல்வதற்கான மலிவான மற்றும் சிறந்த வழியாகும். பார்சல்களை விட லக்கேஜ் கட்டணம் அதிகம். 500 கிமீ தூரம் வரை பைக்கை அனுப்புவதற்கான சராசரி கட்டணம் 1200 ரூபாய், இருப்பினும் இது சற்று மாறுபடலாம். இது தவிர பைக்கை பேக்கிங் செய்ய சுமார் 300-500 ரூபாய் வரை செலவாகும்.
ரயிலில் பைக்கை அனுப்ப, அது உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் பைக்கிற்கு தேவையான ஆர்சி, இன்சூரன்ஸ் போன்ற அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருக்க வேண்டும். இதனுடன், பைக்கில் எந்த விதமான சேதமும் ஏற்படாத வகையில், நன்கு பேக் செய்ய வேண்டும். பார்சல் முன்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. லக்கேஜ் புக்கிங் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
மேலும் படிக்க | Indian Railways: டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியது IRCTC, இனி நேரம் மிச்சமாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR