Good News: விரைவில் விமானத்திலும் இணைய வசதியை அனுபவிக்கலாம்

இன்டர்நெட் பயன்படுத்த முடியாத ஒரு பகுதி என்ற ஒன்று இருக்கிறது. அது வானம். ஆனால் விரைவில் விமானத்தில் வானில் பறக்கும் போதும் இணையத்தை பயன்படுத்த முடியும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2022, 10:06 AM IST
Good News: விரைவில் விமானத்திலும் இணைய வசதியை அனுபவிக்கலாம் title=

உலக அளவில் இண்டெர்நெட் வசதிகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இணையதள சேவை பரவிய பிறகு,  இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

இந்தியர்கள் இன்னும் இணையச் சேவையைப் பயன்படுத்த முடியாத ஒரு பகுதி இருக்கிறது,  என்றால், அது வானம் பகுதி தான் எனக் கூறலாம். ஆனால் இனி வரும் காலங்களில் இந்தியர்கள் வானத்திலும் இணையத்தை பயன்படுத்த முடியும். இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது விமானங்களில் பிராட்பேண்ட் இணையத்தை விரைவில் கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் தலைவர் கூறியது என்ன

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் கூறுகையில், தனது விமான நிறுவனம் தனது விமானங்களில் பிராட்பேண்ட் இணைய சேவையை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என்றார். இந்த தகவலை திங்களன்று அளித்த அவர், அடுத்த சில மாதங்களில் போயிங்-737 மேக்ஸ் விமானங்களை நிறுவனம் தனது விமானக் குழுவில் சேர்க்கும் என்று கூறினார். விமான நிறுவனத்திடம் 91 விமானங்கள் உள்ளன, அதில் 13 மேக்ஸ் விமானங்கள்,  போயிங்-737 விமானங்களின் எண்ணிக்கை 46 என ஸ்பைஸ் ஜெட் தளத்தில் தகவல் உள்ளது.

மேலும் படிக்க | விமான நிலையத்தில் விஜய்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

ஸ்பைஸ்ஜெட்டின் திட்டம்

விமான நிறுவனத்தின் 17வது ஆண்டு நிறைவையொட்டி, ஊழியர்களுக்கு செய்தி அனுப்பிய நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங், ஸ்பைஸ்ஜெட் மாதாந்திர அடிப்படையில் அதிக பயணிகளை கொண்ட நிறுவனமாக உள்ளது என்றும் இது வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மின்னஞ்சலில் தெரிவித்தார். சிங்  மேலும் கூறுகையில், "போயிங் 737 மேக்ஸ் விமானம் வெற்றிகரமாக சேவைக்குத் திரும்பி நிலையில், பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமான நிறுவனம் அதன் அனைத்து பழைய விமானங்களையும் MAX ரக விமானமாக மாற்றி, அடுத்த சில மாதங்களில் பல MAX விமானங்களை  சேர்க்க திட்டமிட்டுள்ளது"  என்றார்.

"இந்த ஆண்டு நாங்கள் எங்கள் நெட்வொர்க்கில் புதிய தயாரிப்புகளைச் சேர்ப்போம். எங்கள் லாயல்டி திட்டமான SpiceClub, சமீபத்தில் அதன் இணை முத்திரை கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. எங்கள் விமானத்தில் பிராட்பேண்ட் இணைய சேவை விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள புதிய வழித்தடங்களை சேவையின் இணைக்க ஸ்பைஸ்ஜெட்டின் நெட்வொர்க் விரிவுபடுத்தப்படும் என்று சிங் கூறினார்.

மேலும் படிக்க | இந்திய விமானப்படையின் ஷம்ஷேர் ஜாகுவார் போர் விமானம்: படத்தொகுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News