இந்திய ரயில்வே புதன்கிழமை தனது முதல் ஏர் கண்டிஷனிங் 3-டயர் எகானமி வகுப்பு ரயில் பெட்டியை தயாரித்துள்ளது, இது "உலகின் மலிவான மற்றும் சிறந்த ஏசி பயணத்திற்கான எடுத்துகாட்டாக இருக்கும்" என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. புதிய AC 3-Tier எகானமி வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணம் தற்போதைய ஏசி த்ரீ டயர் மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்பிற்கும் இடையிலான ஒரு நிலையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே கோச் பேக்டரி தயாரித்துள்ள இந்த ர்ஃஅயில் பெட்டிகளின் வடிவமைப்பிற்கான பணிகள் அக்டோபர் 2020 இல் போர்க்கால அடிப்படையில் தொடங்கியது. கோச் வடிவமைப்பில் பல புதிய அம்சங்கள் உள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ALSO READ |  Indian Railway வழங்கும் அசத்தல் சேவை... இனி உங்கள் லக்கேஜை சுமக்கும் வேலை இல்லை..!!!

படுக்கை வசதி எண்ணிக்கை 72 முதல் 83 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் புதிய கோச்சில்அதிக பயணிகள் பயணிக்க முடியும்.
இதில் பயணிகளுக்கான தகவல் வழங்கும் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.


இந்த வடிவமைப்பில் இந்திய மற்றும் மேற்கத்திய பாணியிலான கழிவறை வசதிகள், அதே நேரத்தில் பயணிகள் வசதிகளின் ஒரு பகுதியாக பொது முகவரி மற்றும் பயணிகள் தகவல் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.


இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், தீ பாதுகாப்பிற்கான  EN45545-2 HL3 என்ற உலக அளவிலான தர நிர்ணயத்திற்கு ஏற்ற வகையில் அமைத்துள்ளது. இதனால், தீ விபத்திலிருந்து சிறந்த பாதுகாப்பு அளிக்கும்


நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டில் இதுபோன்ற 248 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என ரயில்வே பெட்டிகள் தொழிற்சாலை முடிவு செய்துள்ளது. 


இந்த புதிய 3 டயர்  ஏசி எகானமி வகுப்பை அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தும் வகையில், பெரிய அளவில் தயாரித்து   அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி, இப்போது ஒவ்வொரு ரயில் பயணமும் இனிமையான நினைவுகளின் பயணமாக மாறும்,  நம்பிக்கை பிறந்துள்ளது எனலாம்.


ALSO READ | மீண்டும் தொடங்குகிறது IRCTC இ-கேட்டரிங் சேவை; உணவை ஆர்டர் செய்வது எப்படி..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR