New Vande Bharat Trains In 2024: இந்திய ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட  அதிவிரைவு எக்ஸ்பிரஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், 2024 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 14 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 60 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ரயில்வே 2023 இல் 34 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியது.  இந்நிலையில் இந்திய ரயில்வே இந்த ஆண்டு கிட்டத்தட்ட 60 புதிய வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநில அரசுகள் குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை சில வழித்தடங்களில் அறிமுகப்படுத்த கோரி இந்திய ரயில்வேயை தொடர்பு கொண்டுள்ளன. “இதுவரை, இந்திய ரயில்வேக்கு வந்தே பாரத் வழித்தடத்தை தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அமைச்சகத்திடமும் இது குறித்த திட்டம் ஒன்று உள்ளது. மேலும் அனைத்து வழித தடங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன” என்று ரயில்வே தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.


புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மும்பை சென்ட்ரல் - அகமதாபாத், புனே - பெலகாவி, பெங்களூரு - மங்களூரு, விசாகப்பட்டினம் - திருப்பதி, குருவாயூர் - ராமேஸ்வரம், டாடா நகர் - வாரணாசி, பிரயாக்ராஜ் - ஆக்ரா, லக்னோ - பாட்னா, ராய்ப்பூர் - வாரணாசி ஆகிய வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.


முன்மொழியப்பட்ட வந்தே பாரத் சேவைகள் மற்றும் வழித்தடங்கள்


• ஜம்மு–ஸ்ரீநகர், அகமதாபாத்–மும்பை சென்ட்ரல், மும்பை CSMT–ஷேகான், புனே–பெலகாவி, புனே–வதோதரா


• புனே–ஷேகான், புனே–செகந்திராபாத், மங்களூரு–பெங்களூரு, மும்பை எல்டிடி–கோலாப்பூர்


• விசாகப்பட்டினம்–திருப்பதி, குருவாயூர்–ராமேஸ்வரம், டாடாநகர்–வாரணாசி, ஷில்லாங்–மெண்டிபதர்


• ராய்ப்பூர்–வாரணாசி, ராய்ப்பூர்–புரி, லக்னோ–டேராடூன், லக்னோ–பாட்னா


• கொல்கத்தா-ரூர்கேலா, கான்பூர்-கத்கோடம், பிரயாக்ராஜ்-ஆக்ரா


மேலும் படிக்க | LPG Cylinder: வெறும் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் பெறலாம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்


ரயில்வேயின் தொடக்கத் திட்டங்களின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 18 புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் நான்கு புதிய வழித்தடங்கள் தொடங்கப்படும்.


வட மாநிலங்களில் 34 புதிய வழித்தடங்களிலும், தென்னிந்தியாவில் 25 புதிய ரயில்களிலும் புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது "2024 ஆம் ஆண்டில் வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்படும் சில வழித்தடங்களில் மும்பை முதல் ஷேகான், புனே முதல் ஷேகான், பெலகாவி முதல் புனே, ராய்பூர் முதல் வாரணாசி மற்றும் கொல்கத்தா-ரூர்கேலா ஆகியவை அடங்கும்" என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.


குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து புனேவை இணைக்கும் இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பில் வந்தே பாரத் ரயில்கள் தொடங்குவதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக முதல் அதிகாரி தெரிவித்தார்.


தற்போது, ரயில்வே இந்தியா முழுவதும் 41 வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறது. வடக்கு ரயில்வே மற்றும் தெற்கு ரயில்வே தலா எட்டு ரயில்களை இயக்குகின்றன. இது தவிர, கிழக்கு இரயில்வே, வடகிழக்கு இரயில்வே, வடகிழக்கு எல்லை இரயில்வே, தென்கிழக்கு மத்திய இரயில்வே மற்றும் தென்மேற்கு இரயில்வே போன்ற இரயில்வே பிரிவுகளிலும் வந்தே பாரத் இயங்குகின்றன.


2047 ஆம் ஆண்டிற்குள் 4,500 வந்தே பாரத் ரயில்களை உருவாக்க அரசு திட்டம்


மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், 2047 ஆம் ஆண்டுக்குள் 4,500 வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 402 வந்தே பாரத் ரயில்களுக்கான ஒப்பந்தங்களை ரயில்வே வழங்கியுள்ளது. இத்தகைய உயர் தொழில்நுட்ப ரயில்களின் விநியோகம் 2027-க்குள் நிறைவடையும். முன்னதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த ஆண்டுக்குள் ஒவ்வொரு வாரமும் இரண்டு முதல் மூன்று ரயில்கள் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று கூறினார்.


வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் இடங்கள்


ஐசிஎஃப் சென்னையைத் தவிர, ஹரியானாவின் சோனிபட் மற்றும் மகாராஷ்டிராவின் லத்தூரில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். மேலும் ஒவ்வொரு மூலையையும் வந்தே பாரத் ரயில்களுடன் இணைக்கும் பிரதமர் மோடியின் கனவை இது நிறைவேற்றும் என்று வைஷ்ணவ் கூறினார். முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Zero Balance Account: வங்கியில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை திறப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ