LPG Gas Cylinder Connection at Rs. 500: தற்போது இரண்டு வகையான கேஸ் சிலிண்டர்கள் இந்தியாவில் கிடைக்கின்றன, அவற்றில் ஒன்று வணிக ரீதியானது மற்றும் மற்றொன்று வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள். கமர்ஷியல் கேஸ் சிலிண்டர் 19 கிலோவில் கிடைக்கிறது, அதேசமயம் வீட்டு கேஸ் சிலிண்டர் 14 கிலோவில் கிடைக்கிறது. இந்த சிலிண்டர்களில் இருக்கும் கேஸ் அளவைப் பொறுத்து அவற்றின் விலையிலும் வித்தியாசம் உள்ளது. வணிக கேஸ் சிலிண்டரை விட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது, நீங்களும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரை மிகவும் குறைந்த விலைக்கு பெற விரும்பினால், இந்த கட்டுரையை இறுதி வரை படிக்கவும்.
எல்பிஜி சிலிண்டர் விலை:
கடந்த 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை துவங்கியது. 2016 ஆம் ஆண்டு முதல் 10 கோடிக்கும் அதிகமான நுகர்வோர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரைப் பற்றி பேசுகையில், அரசு சில மானியம் அளித்து அதை பெறலாம். அதன்படி தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் சுமார் 600 ரூபாய்க்கு கிடைக்கிறது, மேலும் இந்த விலையானது வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு விதத்தில் மாறுபடலாம்.
மேலும் படிக்க | Zero Balance Account: வங்கியில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை திறப்பது எப்படி?
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 75 லட்சம் இணைப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். இப்போது இந்திய அரசு உஜ்வாலா கேஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர்களை 600 ரூபாய்க்கு வழங்கும். நீங்கள் டெல்லியில் வசிப்பவராக இருந்தால், அங்கு சிலிண்டர் 903 ரூபாய்க்கு கிடைக்கும், சிலிண்டரை வாங்கிய பிறகு, மத்திய அரசு 300 ரூபாய் மானியமாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலன்:
பிரதான் மந்திரி உஜ்வாலா கேஸ் யோஜனா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் 600 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. தற்போது, கேஸ் சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு கிடைக்கும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பலன்களை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே இதை பெற முடியும். தற்போது இந்தியாவில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் சராசரி விலை ரூ.950 ஆக உள்ளது. இது நகரத்திற்கு நகரம் மாறுபடலாம்.
எல்பிஜி சிலிண்டர் விலையை அறிவது எப்படி?
தினசரி மாறிவரும் கேஸ் விலையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றவும், இதன் மூலம் கேஸ் சிலிண்டரின் புதிய விலையை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
* இதற்கு முதலில் பெட்ரோலியத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
* இதற்குப் பிறகு, அதன் பிரதான பக்கத்தில் நீங்கள் கேஸ் சிலிண்டரின் விருப்பத்தைக் காண்பீர்கள்.
* இதற்குப் பிறகு, குறிப்பிடப்பட்ட மூன்று கேஸ் நிறுவனங்களும் உங்கள் முன் தோன்றும், அதில் நீங்கள் எந்த நிறுவனத்தின் விலையை அறிய விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்க.
* நீங்கள் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தவுடன், நிறுவனத்தின் கேஸ் சிலிண்டரின் விலை உங்களுக்குத் தெரியவரும்.
* இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை எளிதில் சரிபார்க்கலாம்.
மேலும் படிக்க | Credit Card Rules: கிரெடிட் கார்ட் விதிகளை மாற்றிய தனியார் வங்கிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ