நாட்டின் ஐடி துறையில் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை என்று முன்னதாக கூறிய போது, அந்த விஷயம் மிகவும் பேசுபொருளானது. இப்போது  இலவசம் குறித்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  பெங்களூருவில் நடைபெற்ற டெக் உச்சி மாநாடு 2023 என்ற கூட்டத்தின் 26வது பதிப்பில் பேசிய நாராயண மூர்த்தி இதைத் தெரிவித்தார். மேலும் தனது கருத்துக்கான காரணத்தையும் விளக்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமுதாய நலனுக்கு பங்களிக்க வேண்டும்


இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசுகையில், எந்த வகையான பொருட்களையும் சேவைகளையும் இலவசமாக வழங்குவது பற்றி பேசுகையில், நான் இலவச சேவைகளுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அரசு வழங்கும் சேவைகள் மற்றும் மானியங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் மக்கள், தனது குடும்பத்தின் நாட்டின், சமூகத்தின் நலனுக்கு பங்களிக்க வேண்டும்.  நீங்கள் அந்த சேவைகளைப் பெறும்போது, ​​​​அந்த மானியங்களைப் பெறும்போது, ​​அதற்குப் பதிலாக நீங்கள் எதையாவது செய்யத் தயாராக இருக்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு ஏழை நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கு முதலாளித்துவம் மட்டுமே ஒரே தீர்வு என்று மென்பொருள் நிறுவனமான மேலும் கூறினார்.


'நானும் ஏழை பின்னணியில் இருந்து வந்தவன்'


Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் நடத்திய 'Fireside Chat' இன் போது இலவச சேவைகள் குறித்து நாராயண மூர்த்தி இந்த அறிக்கையை அளித்துள்ளார். அவர் தனது சொந்த உதாரணத்தை அளித்து, இலவச சேவைகளை வழங்குவதற்கு நான் எதிரானவன் அல்ல, ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் ஏழை பின்னணியில் இருந்து வந்தவன், ஆனால் இலவச மானியம் பெற்றவர்களிடமிருந்து நாம் எதையாவது எதிர்பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களின் வருங்கால சந்ததியினர், அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதிலும் சிறப்பாகச் செயல்படுவதிலும் சிறந்தவர்களாக மாற்றுவதற்கான பொறுப்பு.


வறுமையை ஒழிக்கத் தீர்வு


நிகழ்ச்சியின் போது கோடீஸ்வர தொழிலதிபர் நாராயணமூர்த்தி மேலும் உதாரணங்களைச் சொல்லி, 'உதாரணமாக, இலவச மின்சாரம் தருகிறேன் என்று சொன்னால், அது கேட்க நன்றாகத்தான் இருக்கும். அதைத் தான் அரசு சொல்லியிருக்கிறது, ஆனால் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வருகை சதவீதம் 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் சலுகை உங்களுக்கு கிடைக்கும் எனஅரசு கூற வேண்டும் . இதனுடன், வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் குறித்தும், சுதந்திர சந்தை மற்றும் தொழில்முனைவு என்ற இரட்டைத் தூண்களை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவமே வறுமையை ஒழிக்க எந்த நாட்டிற்கும் ஒரே தீர்வு என்று நான் நம்புகிறேன் என்றார்.


மேலும் படிக்க | 25 வயதாகும் வரை மாத ஓய்வூதியம்: குழந்தைகளின் நலன் காக்கும் EPFO திட்டம்


சீனாவிடம் இருந்து கற்க ஆலோசனை


இந்தியாவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) அதிகரிப்பது குறித்து அரசாங்கத்திற்கு அவர் அளித்த ஆலோசனை குறித்து நிகழ்ச்சியில் கேட்டபோது, ​​​​அரசியல் தலைவர்கள் சீனாவை மிகவும் கவனமாக படிக்க வேண்டும் என்று மூர்த்தி கூறினார். நம்மைப் போன்றே அனைத்து பிரச்சனைகளையும் கொண்டிருந்த சீனா, இந்தியாவை விட ஐந்து அல்லது ஆறு மடங்கு ஜிடிபியைக் கொண்டுள்ளது என்று தொழில்நுட்ப ஜாம்பவான் என அழைக்கப்படும் நாராயண மூர்த்தி கூறினார். எனவே, நமது அரசியல் தலைவர்கள் சீனாவைக் கவனமாகப் படித்து, என்னென்ன நல்ல விஷயங்களை இங்கே கற்று செயல்படுத்த முடியும் என்பதைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


வறுமையை ஒழித்த நாடாக  இந்தியா மாற வேண்டும்


மேலும் ஆங்கில வழிப் பள்ளிகளை நிறுவவும், 3 ஷிப்டுகளில் பணியாற்றவும், நாட்டின் இளைஞர்களை மேம்படுத்த சீனாவுடன் போட்டியிடவும் விரைவான முடிவுகளை எடுக்கவும் அவர் கேட்டுக் கொண்டார். இதனால் இந்தியாவும் சீனாவைப் போல முன்னேறி தனது மக்களின் வறுமையை ஒழித்த நாடாக மாற வேண்டும்  என்றார்.


மேலும் படிக்க | பிஎஃப் தொகைக்கும் வரி உண்டு தெரியுமா? எவ்வளவு? இதற்கான விதி என்ன? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ