Post Office RD Scheme: நமக்கு வரும் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்குமே இருக்கும். சிலர் தங்களின் முக்கிய வேலைகளுக்கு மத்தியில் கூடுதல் வருமானத்திற்காக சில விஷயங்களையும் மேற்கொள்வார்கள். ஆனால் அனைவருக்கும் அந்த வாய்ப்பும், நேரமும் கிடைத்துவிடாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், சிலர் தங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்கவோ அல்லது முதலீடு செய்யவோ விரும்புவார்கள். இன்றைய காலகட்டத்தில் சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் பல்வேறு வாய்ப்புகளும், வழிகளும் இருக்கின்றன. வங்கிகள், ஆன்லைன் தளங்கள், நிதி நிறுவனங்கள் என்றில்லாமல் அஞ்சல் நிலையத்திலும் கூட நீங்கள் இப்போது சேமிக்கவும் செய்யலாம், உங்கள் தகுதிக்கேற்ப முதலீடும் செய்யலாம்.


முதலீடு செய்ய தயக்கமா?


முதலீடு செய்வதில் பலருக்கும் பல தயக்கங்கள் இருக்கும். எதில் முதலீடு செய்வது, எங்கு முதலீடு செய்வது நல்லது, எங்கு முதலீடு செய்தால் அதிக வருமானம் வரும் என பல கேள்விகள் பலருக்கும் இருக்கும். ஆனால் முதலீட்டை நீங்கள் எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த விஷயத்தை அறிந்துகொள்வது நல்லது. எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் சரி அது நீண்ட காலத்திற்கானதாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள் நிதி வல்லுநர்கள்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசு


நீண்ட கால முதலீடு


அந்த வகையில், உங்களுக்கு ரிஸ்க் இல்லாமல் அதிக வருமானம் தரக்கூடிய முதலீடு வேண்டுமென்றால் அதனை நீண்ட கால முதலீட்டுத் திட்டமே பூர்த்தி செய்யும். ஒருவேளை நீங்கள் குறைந்த கால முதலீட்டுத் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என நினைத்தால் அதில் வருமானம் வரக்கூடிய அதே அளவிற்கு ரிஸ்க்கும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, முதலீடு செய்வதற்கு முன் நிதி சார்ந்த வல்லுநரின் ஆலோசனையை கேட்பது மிகவும் நல்லது. 


தபால் நிலையத்தின் RD திட்டம்


இந்நிலையில், உங்களுக்கு ஒரு 5 வருடத்தில் 21 லட்சம் ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய ஒரு எளிமையான முதலீடு குறித்த அறிமுகத்தை இங்கு காணலாம். முன்னர் கூறியது போல், இது தபால் நிலையம் சார்ந்த முதலீட்டுத் திட்டம்தான். தபால் நிலையத்தின் RD திட்டம் (Post Office RD Scheme) மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்ற திட்டமாக பார்க்கப்படுகிறது. அதுகுறித்து சற்று விரிவாக இதில் காணலாம்.


வருடாந்திர வட்டி விகிதம் எவ்வளவு?


இதில் நீங்கள் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. உங்களின் மாத வருமானத்தில் சில பகுதியை மட்டும் முதலீடு செய்தால் மட்டும் போதும். குறைந்தபட்சம் 100 ரூபாய் ஆகும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமென்றாலும் செலுத்தலாம். உங்களின் குழந்தைகளின் பெயரில் கூட பெற்றோர் இணைந்து ஒரு கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் தற்போது 6.7% வருடாந்திர வட்டி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் மாற்றப்படலாம். இந்த திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ந்துவிடும். மேலும் 5 ஆண்டுகளுக்கு வேண்டுமென்றால் நீட்டித்துக்கொள்ளலாம்.


கிடைக்கும் வருமானம்


உதாரணத்திற்கு இதில் நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் மாதம் முதலீடு செய்கிறீர்கள் என்றால், ஓராண்டுக்கு 60 ஆயிரத்தை சேமிக்கலாம். இதே 5 ஆண்டுகளுக்கு எனில் 3 லட்ச ரூபாய் சேமித்திருப்பீர்கள். மறுமுனையில் இந்த தொகைக்கு 6.7% என கணக்கிட்டால் 5 ஆண்டுக்கு 56 ஆயிரத்து 830 ரூபாய் வட்டி வரும். மொத்தமாக 3 லட்சத்து 56 ஆயிரத்து 830 ரூபாய் வருமானமாக வரும்.


அதேபோன்று தொகை அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கு வருமானமும் அதிகரிக்கும். அந்த வகையில் நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாயை இதில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 5 ஆண்டுகளில் 21 லட்சத்து 40 ஆயிரத்து 74 ரூபாய் சேர்ந்திருக்கும். இதற்கு வட்டியாக 3 லட்சத்து 40 ஆயிரத்து 974 ரூபாய் சேர்ந்திருக்கும். மொத்தமாக 24 லட்சத்து 81 ஆயிரத்து 48 ரூபாயை நீங்கள் பெறுவீர்கள். இந்த தொகையை நீங்கள் மற்ற முதலீட்டில் செய்தாலும் வருமானம் இதைவிட அதிகமாக கிடைக்கலாம். ஆனால், இதில் ரிஸ்க் மிக மிக குறைவுதான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். 


மேலும் படிக்க | Section 80C தவிர வருமான வரியை சேமிக்க உதவும் அட்டகாசமான வழிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ