இந்தியா முழுவதும் இருக்கும் பிரபலமான சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில் உள்ளிட்ட புனித தலங்களுக்கு ஐஆர்சிடிசி சுற்றுலா அழைத்துச் செல்கிறது. பாதுகாப்பான பயணம் மற்றும் சிறப்பான அனுபவமாக இருக்க வேண்டும் நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மிக குறைந்த விலையில் அனைத்து வசதிகளுடன் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சிறப்பு சுற்றுலா பயணத்தில் தென்னிந்தியாவில் இருக்கும் பிரபலமான கோயில்களுக்கு சென்று வரலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஆர்சிடிசி அறிவித்திருக்கும் தக்ஷிண பாரத சுப் யாத்ராவின் கீழ், ராமேஸ்வரம், மதுரை, திருப்பதி, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்களுக்கான தங்கும் வசதி, டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட தகவல்களை இங்கே பார்த்து தெரிந்து கொள்வோம். 


ஐஆர்சிடிசி சுற்றுலா பயணம்


இந்த சுற்றுலா 7 இரவுகள் மற்றும் 8 பகல்களுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக IRCTC தெரிவித்துள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 720 ஸ்லீப்பர் இருக்கைகள் உள்ளன. இந்த பேக்கேஜின் விலை ஒருவருக்கு ரூ.15,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. IRCTC பயணிகள் இரவு தங்குவதற்கு ஏசி அல்லாத அறைகளை வழங்கப்படும். இதனுடன், காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும். சைவ உணவுகள் மட்டுமே உணவுப் பட்டியலில் இருக்கும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. IRCTC பயணிகளுக்கான பயணக் காப்பீடு மற்றும் ரயிலுக்குள் பாதுகாப்பை வழங்கும். ஒருவேளை செல்லும் இடத்தில் நுழைவு கட்டணம், படகு சவாரி, சாகச விளையாட்டு இருந்தால் அதற்கான செலவுகளை பயணிகளே ஏற்க வேண்டும். 


மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு முக்கிய அப்டேட்: ITR 2 ஆஃப்லைன் படிவங்களை வெளியிட்டது வருமான வரித்துறை


பிலாஸ்பூரில் இருந்து ரயில் இயக்கப்படும்


IRCTC மூலம் தென்னிந்தியாவிற்கு பயணிகளின் பயணம் சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூரில் இருந்து தொடங்கப்படும். இந்த ரயில் 25 மே 2023 அன்று பிலாஸ்பூரில் இருந்து புறப்படும். முதல் நாளில், இந்த ரயில் பிலாஸ்பூர், படாபரா, டில்டா-நெவ்ரா, ராய்பூர், துர்க், ராஜ்நந்த்கான், கோண்டியா, திரோடா, பண்டாரா சாலை, நாக்பூர், சேவாகிராம் ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும். மூன்றாவது நாளான 27 மே 2023 அன்று இந்த ரயில் ராமநாதபுரத்தை சென்றடையும். இங்கிருந்து சாலை வழியாக ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். 


பயணிகளுக்கான வழிகாட்டுதல்கள்


இந்தப் பயணம் தொடர்பாக சில வழிகாட்டுதல்களை IRCTC வழங்கியுள்ளது. அனைத்து பயணிகளும் வாக்காளர்/ஆதார் அட்டை மற்றும் கோவிட்-19 தடுப்பூசியின் இறுதி டோஸ் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். பயணிகள் தங்கும் சில ஹோட்டல்களில் லிப்ட் வசதி இல்லாமல் இருக்கலாம். அதன் முன்பதிவை IRCTC இணைப்பில் bit.ly/3MplTrk-ல் சரிபார்த்துக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | EPF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி? எளிமையான வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ