ITR Filing: இந்த தவறுகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.... ஜாக்கிரதை!!
ITR Filing: நீங்கள் முதல் முறையாக ஐடிஆர் தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்றால், அதை ஒரு நிபுணரைக் கொண்டோ அல்லது அவருடைய மேற்பார்வையிலோ தாக்கல் செய்வது நல்லது.
ITR Filing: ஜூலை மாதம் தொடங்கிவிட்டது. இது வருமான வரி கணக்கின் காலம். 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2024 ஆகும். ஆகையால், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் வரி செலுத்துவோர் செய்ய வேண்டும். வேலை அல்லது வணிகத்தில் மூலம் பணம் ஈட்டும் மக்கள் அனைவரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரி அடுக்குக்குள் வரவில்லை என்றாலும், ஐடிஆர் தாக்கல் செய்வது நல்லது. இதன் மூலம் எதிர்காலத்தில் பல நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறை ஐடிஆர் தாக்கல்
நீங்கள் முதல் முறையாக ஐடிஆர் தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்றால், அதை ஒரு நிபுணரைக் கொண்டோ அல்லது அவருடைய மேற்பார்வையிலோ தாக்கல் செய்வது நல்லது. சரியான புரிதல் அல்லது தகவல் இல்லாமல் செய்யப்படும் தவறு காரணமாக, வருமான வரித்துறையின் நோட்டீசை பெறக்கூடிய நிலை ஏற்படலாம், மேலும் உங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.
சரியான படிவத்தை தேர்வு செய்வது அவசியம்
வெவ்வேறு நபர்களின் வருமானம் மற்றும் அவர்கள் சம்பாதிக்கும் வழிகளைக் கருத்தில் கொண்டு, வருமான வரித் துறை பல வகையான ஐடிஆர் படிவங்களை வழங்குகிறது. சரியான புரிதல் இல்லாமல் தவறான ரிட்டர்ன் படிவம் மூலம் நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்தால், வருமான வரித் துறை உங்களுக்கு ஐடி நோட்டீஸ் (Income Tax Notice) அனுப்பலாம். இருப்பினும், நோட்டீஸை அனுப்பும் முன், அந்தத் தவறைத் திருத்திக் கொள்ள வருமான வரித்துறை (Income Tax Department) ஒரு வாய்ப்பையும் வழங்கும். எனவே, ஐடிஆர் தாக்கல் செய்ய சரியான படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுக்கு அதைப் பற்றி தெரியாவிட்டால், ஒரு நிபுணரின் உதவியைப் பெறுங்கள்.
வருமான வரித்துறை எப்போது அபராதம் விதிக்கின்றது?
- போதுமான புரிதல் இல்லாத காரணத்தாலோ, அல்லது வரியை குறைக்க வேண்டுமென்றே நீங்கள் தவறான அறிக்கையை தாக்கல் செய்தாலோ, அல்லது குறைவான அறிக்கையை தாக்கல் செய்தாலோ நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.
- உங்கள் தவறு வருமான வரித்துறையால் பிடிபட்டால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்.
- இப்படி நடந்தால், நிலுவையில் உள்ள வரித் தொகையில் 100% முதல் 300% வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும் படிக்க | NSC vs பரஸ்பர நிதியம்... மொத்தமாக முதலீடு செய்ய எது பெஸ்ட்..!!
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வழிமுறை:
- முதலில் வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளமான https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login க்குச் செல்லவும்.
- ஐடி கடவுச்சொல்லை உள்ளிட்டு லாக்-இன் செய்யவ்யும். அதன் பிறகு, ஒரு பக்கம் திறக்கும். அங்கு e-file -இல் கிளிக் செய்யவும். அதன் பிறகு File Income Tax Return ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- 2023-24 மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து தொடரவும்.
- இங்கே ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விருப்பத்தைப் பெறுவீர்கள் ஆன்லைனை தேர்வு செய்து 'பர்சனல்' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது ITR-1 அல்லது ITR-4 இலிருந்து உங்களுக்கு ஏற்ற படிவத்தைத் தேர்ந்தெடுத்து தொடரவும்.
- நீங்கள் சம்பளம் வாங்கு, நபராக இருந்தால், ITR-1ஐத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, படிவம் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்படும்.
- பின்னர் 'Filling Type' -க்கு சென்று 139(1)- Original Return என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட படிவம் உங்கள் முன் திறக்கும். தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து அதை சேவ் செய்யவும்.
- வங்கி விவரங்களை மிகவும் கவனமாக நிரப்பவும். நீங்கள் மேலே உள்ள ஆஃப்லைன் பயன்முறையைத் தேர்ந்தெடுத்தால், பதிவிறக்கப் படிவத்தில் அனைத்துத் தகவலையும் பூர்த்தி செய்த பிறகு, Attach File என்பதை தேர்ந்தெடுத்து அங்கு நீங்கள் உங்கள் படிவத்தை இணைக்க வேண்டும்.
- ஃபைலை அட்டாச் செய்த பிறகு, வலைத்தளம் ஃபைலை வேலிடேட் செய்யும். அதன் பின்னர் “Proceed To Verification” என்பதைக் கிளிக் செய்யவும். இந்த வழியில் நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யலாம்.
மேலும் படிக்க | ஜூலை 31-க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ