ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? E-Verify செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ

ITR Filing: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகின்றது. பொதுவாக பெரும்பாலான நிறுவனங்கள் ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 ஐ வழங்குகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 4, 2024, 06:06 PM IST
  • E-filing என்றால் என்ன?
  • வருமான வரி போர்ட்டலில் ITR ஐ இ-ஃபைல் செய்வது எப்படி?
  • ITR தாக்கல் செய்வதால் கிடைக்கும் பல நன்மைகள்.
ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? E-Verify செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ title=

ITR Filing: இது வரி செலுத்துவோர் கனவமாக இருக்க வேண்டிய காலம். வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகின்றது. பொதுவாக பெரும்பாலான நிறுவனங்கள் ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 ஐ வழங்குகிறார்கள். வரி செலுத்தும் பெரும்பாலானோர் தங்கள் வரிகளை செலுத்தும் மாதமாக ஜூலை உள்ளது. படிவம் 16 உடன், வரி செலுத்துவோர் படிவம் 26AS, வருடாந்திர தகவல் அறிக்கை (AIS), வரி தகவல் அறிக்கை (TIS), வங்கி அறிக்கைகள் மற்றும் வட்டி சான்றிதழ்கள் போன்ற பிற முக்கிய ஆவணங்களையும் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது தயாராக வைத்திருக்க வேண்டும். 

ஐடிஆர் படிவங்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை ஒழுங்கமைத்து, வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தயாரானதும், அடுத்த கட்டம், நீங்கள் சரியான ITR படிவத்தைக் தேர்ந்தெடுப்பது. 2023-24 நிதியாண்டிற்கான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வருமான வரித் துறை,  ITR-1 முதல் ITR-7 வரை, 7 படிவங்களை அறிவித்துள்ளது:

யார் வரி செலுத்த வேண்டும்?

வருமான வரி அறிக்கை (ITR) படிவத்தை தாக்கல் செய்யும் போது, ​​வரி செலுத்துவோர் தங்கள் வருமானம், முதலீடுகள், வரி விலக்குகள் மற்றும் வரிகளை பற்றி தெரிவிக்கிறார்கள். வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ், ஒரு நபரின் வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால், அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டும். 

ITR தாக்கல் செய்வதால் கிடைக்கும் பல நன்மைகள்

ITR ஐ தாக்கல் செய்வது இன்னும் பல விஷயங்களுக்கும் உதவுகிறது. ஆகையால் உங்கள் வருமானம் அடிப்படை விலக்கு வரம்பின் கீழ் வந்து, உங்களுக்கு வரி விதிக்கப்படாவிட்டாலும், ஐடிஆர் தாக்கல் செய்வது நல்லது. வரிக் கணக்கை தாக்கல் செய்வதன் மூலம், இந்த ஆண்டில் ஏற்படும் சில நஷ்டங்களை அடுத்த நிதியாண்டுக்கு எடுத்துச் சென்று டேக்ஸ் ரீஃபண்ட் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விசா பெறுவதற்கும், வங்கிகளில் கடன்களைப் பெறுவதற்கும், டேர்ம் இன்ஷூரன்ஸ் பெறுவதற்கும் ஐடிஆர் தாக்கல் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்ற தகவல் பலருக்கு  தெரிந்திருக்க வாய்ப்புல்லை.

E-filing என்றால் என்ன?

உங்கள் வரிக் கணக்கைச் சமர்ப்பித்து அனைத்துப் பணிகளையும் டிஜிட்டல் முறையில் செய்து முடிக்கும் செயல்முறை E-filing எனப்படும். வரிக் கணக்கை இ-ஃபைலிங் செய்ய, வரி செலுத்துவோர் (Taxpayers) புதிய வருமான வரி போர்ட்டலை பான் அடிப்படையிலான லாக் இன் சான்றுகளுடன் அணுகலாம். வரி செலுத்துவோர் தங்கள் வரி தாக்கல் செயல்முறையை எளிதாக்க இதில் உள்ள பல்வேறு அம்சங்கள் பயன்படும். 

வருமான வரி போர்ட்டலில் ITR ஐ இ-ஃபைல் செய்வது எப்படி?

ITR Filing: லாக் இன் செய்யும் செயல்முறை

- முதலில் வருமான வரி ஈ-ஃபைலிங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று ‘Login’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- பயனர் ஐடி பிரிவில் உங்கள் பான் எண்ணை உள்ளிடவும்.
- ‘Continue’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் கடவுச்சொல்லை (Password) உள்ளிடவும்.
- லாக்-இன் செய்ய ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும்.

ITR Filing: வருமான வரி தாக்கல் செவ்தற்கான பக்கம்

- ‘File Income Tax Return’ என்பதை தேர்வு செய்யவும்.
- ‘e-File’ tab > ‘Income Tax Returns’ > ‘File Income Tax Return’ என்பதைக் கிளிக் செய்யவும்.

ITR Filing: வருமான வரி தாக்கல் செய்யும் முறை

- சரியான ‘Assessment Year’ தேர்ந்தெடுக்கவும்
- FY 2023-24 க்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால்,  ‘Assessment Year’ -ஐ ‘AY 2024-25’ ஆகத் தேர்ந்தெடுக்கவும். 
- வருமான வரி தாக்கல் செய்யும் முறையை  ‘Online’ என தேர்வு செய்யவும். 
- தாக்கல் செய்யும் வகையை அசல் வருமானம் (Original Return) அல்லது திருத்தப்பட்ட வருமானமாகத் (Revised Return) தேர்ந்தெடுக்கவும்.

ITR Filing: ஸ்டேட்டஸ்

- உங்கள் ஸ்டேடஸைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பொருந்தக்கூடிய தாக்கல் நிலையைத் தேர்ந்தெடுக்கவும்: தனிநபர், HUF அல்லது பிற (Individual, HUF, or Others). 
- பெரும்பாலானவர்களுக்கு, 'தனிநபர்' என்ற ஸ்டேடஸே இருக்கும். 
- ஸ்டேடஸை தேர்ந்தெடுத்து ‘Continue’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் படிக்க | மத்திய அரசு உழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 44% அதிரடி ஏற்றம்? காரணம் இதுதான் 

ITR Filing: ஐடிஆர் வகை

- ஐடிஆர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் வருமான ஆதாரங்களின் அடிப்படையில் உங்களுக்கு எந்த ITR படிவம் தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும். 
- 7 ITR படிவங்கள் உள்ளன, இதில் ITR 1 முதல் 4 வரை தனிநபர்கள் மற்றும் HUFகளுக்கு பொருந்தும்.

ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்யும் காரணம் 

- ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காரணத்தைத் தேர்வு செய்யவும்.
- இவற்றில் உங்கள் வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிடவும்: விலக்கு வரம்பிற்கு மேல் வரி விதிக்கக்கூடிய வருமானம், குறிப்பிட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்தல் போன்றவை.

ITR Filing: சரிபார்ப்பு

- முன் நிரப்பப்பட்ட தகவல்களை சரிபார்க்கவும்
- பான், ஆதார், பெயர், தொடர்புத் தகவல் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற முன் நிரப்பப்பட்ட விவரங்களைச் சரிபார்க்கவும். 
- உங்கள் வருமானம், விலக்குகள் மற்றும் விலக்கு விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.

ITR Filing: ஈ-வெரிஃபை

- கடைசி கட்டமாக, உங்கள் வருமானத்தை நேர வரம்பிற்குள் (30 நாட்கள்) சரிபார்க்க வேண்டும், அதாவது வெரிஃபை செய்ய வேண்டும். ஆதார் ஓடிபி (OTP), EVC, நெட் பேங்கிங் (Net Banking) போன்ற முறைகளைப் பயன்படுத்தி அல்லது ITR-V இன் ஃபிசிக்கல் நகலை CPC, பெங்களூருக்கு அனுப்பி நீங்கள் ஈ-வெரிஃபை செய்யலாம்.

மேலும் படிக்க | அவசரத் தேவைக்கு பணம் தேவையா? பர்சனல் லோன் தவிர வேற ஆப்ஷன்கள் இவை... 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News