ஐடிஆர் தாக்கல் செய்தவுடன் சரியாக ITR Refund கிடைக்க இதை செய்ய மறக்காதீர்கள்: செக் செய்யும் வழிமுறை இதோ
ITR Filing: வழக்கமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து 4-5 வாரங்களுக்குள் ரீஃபண்ட் பணம் திரும்பக் கிடைக்கும். ஆனால் சில சமயங்களில் சில காரணங்களால் வரி செலுத்துவோர் ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறுவது தடைபடலாம்.
ITR Filing: வரி செலுத்துவோருக்கு இது முக்கியமான நேரம். வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடு நெருங்கி வருகிறது. ஜூலை 31 இதற்கான கடைசி நாள் என வருமான வரித்துறை (Income Tax Department) நிர்ணயித்துள்ளது. இதற்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்ய அபராதம் கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடிஆர் ரீஃபண்ட்
ஏற்கனவே ஐடிஆர் தாக்கல் செய்தவர்கள் ரீஃபண்ட் (ITR Refund) பணத்தைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளனர். இன்னும் சிலர் ரீஃபண்ட் பணத்தை திரும்ப பெற காத்திருக்கிறார்கள். வழக்கமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து 4-5 வாரங்களுக்குள் ரீஃபண்ட் பணம் திரும்பக் கிடைக்கும். ஆனால் சில சமயங்களில் சில காரணங்களால் வரி செலுத்துவோர் (Taxpayers) ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறுவது தடைபடலாம்.
ரீஃபண்ட் பணம் நம்மிடம் வந்து சேர தாமதமாக காரணம் என்ன? சரியான நேரத்தில் ரீஃபண்டை திரும்பப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? இவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஐடிஆர் ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்
- ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெற, உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது மட்டுமல்லாமல், அதை ஈ-வெரிஃபை செய்வதும் அவசியமாகும்.
- ITR ஈ-வெரிஃபை செய்யப்படும் வரை வரி செலுத்துவோரது வருமான வரி கணக்கு செயலாக்கப்படாது.
- ஈ-வெரிஃபிகேஷனுக்குப் பிறகு, பணத்தைத் திரும்பப் பெற 4-5 வாரங்கள் ஆகலாம். ஆகையால் ஈ-வெரிஃபை செய்வதை மறக்கக்கூடாது.
ஈ-வெரிஃபிகேஷன் தவிர, வேறு சில காரணங்களாலும் வருமான வரி கணக்கு ரீஃபண்ட் தாமதமாகலாம்:
- ஆதார் கார்டுடன் பேன் அட்டை இணைக்கப்படாவிட்டால்
- வருமான வரித் துறை அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்காமல் போனால்
- TDS பொருந்தாமல் போனால்
- உங்கள் கணக்கு எண் அல்லது ஐஎஃப்எஸ்சி குறியீடு தவறாக இருந்தால்
இவை அனைத்தும் சரியாக இருந்தும் ரீஃபண்ட் தொகை வரவில்லை என்றால் என்ன செய்வது? எல்லாம் சரியாக இருந்தால், அதாவது, நீங்கள் ITR ஐ சரியாக தாக்கல் செய்து, ஈ-வெரிஃபிகேஷன் போன்றவற்றைச் செய்து, வேறு எந்த தவறும் செய்யாமலிருந்தும், ரீஃபண்ட் பணத்தை பெறவில்லை என்றால் வருமான வரித்துறையின் இணையதளத்திற்கு சென்று இதை செக் செய்யலாம். சில சமயங்களில் தொழில்நுட்ப காரணங்களாலும் சிலருக்கு ரீப்ஃண்ட் கிடைக்காமல் போகலாம்.
ரீஃபண்ட் ஸ்டேடஸை இணையதளத்தில் செக் செய்வதாற்கான செயல்முறை இதோ:
- முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal/ க்குச் செல்லவும்.
- பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
- இப்போது வருமான வரி ரிட்டர்ன் படிவம் திரையில் தெரியும்.
- இதற்குப் பிறகு, படிவத்தின் கீழே உள்ள டிராப்டவுன் பட்டியலில் இருந்து உங்களுக்கான ஆப்ஷனை கிளிக் செய்து ITR ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- இதன் பிறகு மதிப்பீட்டு ஆண்டை உள்ளிட்டு அதை சப்மிட் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு, ரீஃபண்ட் நிலையை சரிபார்க்க, ITR Acknowledgment Number -இல் கிளிக் செய்ய வேண்டும்.
- இதன் பின்னர், ITR ரீஃபண்ட் நிலை திரையில் தெரியும்.
இது தவிர, இந்த வழியிலும் ரீஃபண்ட் ஸ்டேடசை செக் செய்யலாம்
- முதலில் https://tin.tin.nsdl.com/oltas/refundstatuslogin.html என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- பக்கத்தை கீழே ஸ்க்ரோல் செய்தால், உங்களிடம் இரண்டு வகையான தகவல்கள் கேட்கப்படும்.
- ஒன்று பான் எண்
- ரீஃப்ண்ட் கிடைக்க வேண்டிய ஆண்டு.
- இந்த தகவல்களை உள்ளிடவும்.
- இதன் பின்னர் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும்.
- இதற்குப் பிறகு Proceed என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு ரீஃபண்ட் ஸ்டேடஸ் தெரியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ