சிலிண்டர் விலை, ஐடிஆர், கூகுள் மேப்ஸ்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களே

Major Changes From August 1, 2024: ஆகஸ்ட் 1 முதல், நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றங்கள் பலரது அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 27, 2024, 02:25 PM IST
  • HDFC வங்கி கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்.
  • கூகுள் மேப்ஸ் சேவைக் கட்டணங்கள் குறைக்கப்படும்.
  • எல்பிஜி சிலிண்டர் விலை.
சிலிண்டர் விலை, ஐடிஆர், கூகுள் மேப்ஸ்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களே title=

Major Changes From August 1, 2024: இன்னும் சில நாட்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் வழக்கமான மாற்றங்களும் சில புதிய மாற்றங்களும் இருக்கும். அவற்றை பற்றிய புரிதல் இல்லாமல் போனால், நாம் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதமும் சில விதிகளில் மாற்றங்கள் ஏற்படும். ஆகஸ்ட் 1 முதல் ஏற்படவுள்ள சில முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஆகஸ்ட் 1 முதல், நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றங்கள் பலரது அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

ஆகஸ்ட் 2024 -இல் (August 2024) ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்களில், நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான HDFC வங்கிகளின் கிரெடிட் கார்டு விதிகளின் மாற்றம், கூகுள் இந்தியாவில் கூகுள் மேப்ஸிற்கான கட்டணங்களில் மாற்றம் ஆகியவை அடங்கும். இந்த மாற்றங்கள் நம் வாழ்வில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொள்ள அவை குறித்து தொடர்ந்து அறிந்திருப்பது அவசியமாகும். அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

எல்பிஜி சிலிண்டர்

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் (LPG Cylinder) விலையில் பெரிய மாற்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சில மாதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாமலும் போகலாம். கடந்த மாதம், அதாவது ஜூலை மாதத்தில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை மத்திய அரசு குறைத்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி இது மேலும் குறைக்கப்படலாம் என்றும் வீட்டு உயபோக சிலிண்டர் விலையிலும் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றது. 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்... எப்போது?

கூகுள் மேப்ஸ் சேவைக் கட்டணங்கள் குறைக்கப்படும்

ஆகஸ்ட் 1, 2024 முதல் இந்தியாவில் கூகுள் மேப்ஸ் (Google Maps) விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கூகுள் நிறுவனம் இந்தியாவில் சேவைக் கட்டணங்களை 70 சதவீதம் வரை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது மட்டுமின்றி, இப்போது டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாயில் கட்டணங்கள் பில் செய்யப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களால் வழக்கமான பயனர்களுக்கு எந்த தாக்கமும் இருக்காது என்பதும் அவர்களுக்கு எந்த வகையான கூடுதல் கட்டணங்களும் விதிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

HDFC வங்கி கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்

ஆகஸ்ட் 1 முதல், CRED, Cheq, MobiKwik மற்றும் Freecharge போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் வாடகை செலுத்துவதற்கு பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதம் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.3,000 வரை கட்டுப்படுத்தப்படும். மேலும், ரூ.15,000க்கு கீழ் உள்ள எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. ஆனால் ரூ.15,000க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். இதுவும் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.3,000 என கட்டுப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடிஆர் தாக்கல்

வரி செலுத்துவொர் (Tax Payers) அனைவரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. ஆகஸ்ட் 1 -க்கு பிறகு ஐடிஆர் தாக்கல் செய்யும் நபர்கள் அபராதத்துடன் அதை செலுத்த வேண்டும். 

மேலும் படிக்க | Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News