வருமான வரி செலுத்துபவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய கடைசி தேதி (ஐடிஆர்) FY 2021-22 ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 31, 2022 ஆகும்.  கடைசி நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் இன்னும் பல வரி செலுத்துவோர் தங்கள் ஐடிஆர் கணக்கை தாக்கல் செய்யவில்லை, அரசாங்கம் இந்த காலக்கெடுவை நீட்டிக்கலாம் என்று பலரும் நம்புகின்றனர்.  ஆனால் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு இன்னும் பரிசீலிக்கவில்லை என்று வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். 50 சதவீதத்திற்கும் அதிகமான வரி செலுத்துவோர் இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றும், 37 சதவீதம் பேர் காலக்கெடுவிற்குள் கணக்கை தாக்கல் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல என்றும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ஜூலை 20ம் தேதி அறிமுகம்: விலை ரூ 15 லட்சம்


இதுவரை, AY 2022–23க்கான 2 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் வருமான வரி மின்-தாக்கல் முறையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.  2021-22 நிதியாண்டுக்கான அறிக்கையை  2.3 கோடிக்கும் அதிகமான கணக்குகள் ஜூலை 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வருவாய்த்துறை செயலாளர் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ஆரம்பத்தில் ரிட்டன்களை தாக்கல் செய்வதில் தாமதம் இருந்தது ஆனால் இப்போது தினசரி அடிப்படையில் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.  மேலும் இது 25 லட்சம் முதல் 30 லட்சம் வருமானம் வரை சற்று அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.  


கடந்த நிதியாண்டில் (2020-21), டிசம்பர் 31, 2021 நீட்டிக்கப்பட்ட நிலுவைத் தேதிக்குள் சுமார் 5.89 கோடி ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த முறை 9-10 சதவீதம் பேர் கடைசி நாளில் தாக்கல் செய்தனர். அப்போது 50 லட்சத்துக்கும் மேல் இருந்தது.  இந்த முறை மக்களிடம் 1 கோடிக்கு தயாராக இருக்கச் சொன்னேன் என்று செயலர் கூறினார். மேலும் அவரை கூறுகையில் இதுவரை, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்கும் யோசனை இல்லை என்றும் தெளிவாக கூறியுள்ளார்.


மேலும் படிக்க | உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து; புதிய ரூல்ஸ் தெரிஞ்சிகோங்க 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ