இந்த வழிகள் மூலம் வருமான வரியை அதிகளவில் சேமிக்கலாம்!
2022-2023 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதனால், FY23க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது கூடுதல் விலக்குகளைப் பெறுவதற்கான பயனுள்ள வழிகளை தெரிந்துகொள்ளலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரி செலுத்துவதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க உதவும். 80சி மற்றும் 80டி பிரிவின் கீழ் உள்ள விலக்குகள் போன்ற வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ் பல விலக்குகள் உள்ளன. அதேசமயம் சம்பளம் பெறும் வகுப்பினருக்கு வருமான வரியில் அதிகமாகச் சேமிப்பதற்கான வழிகள் மிகவும் குறைவான அளவிலேயே இருக்கிறது. 2022-2023 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதனால், FY23க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது கூடுதல் விலக்குகளைப் பெறுவதற்கான பயனுள்ள வழிகளை இங்கு நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | அன்லிமிடெட் ஆ பேசனுமா? ரூ 179 ரீசார்ஜ் பிளான்..அள்ளி வீசும் ஏர்டெல்
1) வீட்டு வாடகை அலவன்ஸ் (ஹெச்ஆர்ஏ) என்பது ஊழியர்களுக்கான பொதுவான சம்பளக் கூறு ஆகும், இதற்கு முற்றிலும் வரி விதிக்கப்படாது. 1961-ன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (13A) இன் கீழ் ஹெச்ஆர்ஏ-ன் ஒரு பகுதி விலக்கு அளிக்கப்படுகிறது. மொத்த வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் கணக்கிடுவதற்கு முன், ஹெச்ஆர்ஏ விலக்குத் தொகை மொத்த வருமானத்தில் இருந்து கழிக்கப்படும். ஒரு ஊழியர் தனது சொந்த வீட்டில் வசித்தாலோ அல்லது வாடகை ஏதும் செலுத்தாமலோ இருந்தாலோ அவர்களுக்கு வரியுண்டு. அதுவே மெட்ரோ நகரங்களில் வசிக்கும் சம்பளம் பெறும் ஊழியர் ஹெச்ஆர்ஏ-ல் இருந்து 50 சதவிகிதம் விலக்கு பெற தகுதியுடையவர்.
2) சம்பளம் பெறும் ஊழியர்களுடைய குழந்தைகளின் கல்விக்கான அலவன்ஸ்கள் மற்றும் கல்விக் கட்டணங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கல்விக்கான அலவன்ஸ்களின் கீழ், இரண்டு குழந்தைகள் வரை ஒரு குழந்தைக்கு மாதம் ரூ. 100 வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 80சி பிரிவின் கீழ் குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.
3) தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இரண்டும் தங்கள் ஊழியர்களை சில சமயங்களில் வேறு ஒரு இடத்திற்கு பணிமாற்றம் செய்யும். முதல் 15 நாட்களுக்கு தங்குமிடம் மற்றும் ரயில்/விமான டிக்கெட்டுகள் மற்றும் கார் போக்குவரத்து செலவுகள், பதிவுக் கட்டணம் மற்றும் பேக்கேஜிங் கட்டணங்கள் போன்றவற்றிற்கு நிறுவனத்தின் முதலாளியால் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
4) வருமான வரி செலுத்துபவர்கள் இந்தியாவிற்குள் ஒரு பயணத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான செலவுகளுக்கு விலக்கு கோரலாம். எல்டிஏவின் கீழ் ஊழியர்கள் 4 ஆண்டுகளில் இரண்டு முறை பலன்களை பெறலாம் மற்றும் பயணச் செலவில் வரி செலுத்துவோர் குடும்ப உறுப்பினர்களுக்கு வரி விலக்குகளைப் பெறலாம்.
5) செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், புத்தகங்கள் போன்றவற்றை வாங்கும்போது ஏற்படும் செலவினங்களுக்காக புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள் அலவன்ஸ்கள் கீழ் வரி விலக்கு உண்டு. குறிப்பிடப்பட்ட வரம்பிற்குள் ஒரு ஊழியர் உண்மையான கட்டணத்திற்கு வரி விலக்கு கோரலாம்.
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ