அன்லிமிடெட் ஆ பேசனுமா? ரூ 179 ரீசார்ஜ் பிளான்..அள்ளி வீசும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களின் பெரிய பட்டியலைக் கொண்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பயனர்கள் மலிவான திட்டங்களைத் தேடுகிறார்கள். இந்த சூழலில், ஏர்டெல் வழங்கும் ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்களை குறித்து தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 16, 2023, 12:33 PM IST
  • ஏர்டெல் ரூ.179 ரீசார்ஜ் திட்டம்.
  • 28 நாள்கள் இந்த திட்டம் செல்லுப்படியாகும்.
  • 2ஜிபி டேட்டா வரம்பு கிடைக்கிறது.
அன்லிமிடெட் ஆ பேசனுமா? ரூ 179 ரீசார்ஜ் பிளான்..அள்ளி வீசும் ஏர்டெல் title=

ஏர்டெல் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறது. ரிலையன்ஸ் ஜியோவில் மிகப் பெரிய பயனர்கள் இருந்தபோதிலும், ஏர்டெல் அதனுடன் பெரும் போட்டியைச் சந்தித்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது பல சூப்பரான திட்டத்தை வழங்கி வருகின்றது. ஏர்டெல் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான திட்டங்களைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் நீங்களும் ஏர்டெல் பயனராக இருந்தால், இன்று நாங்கள் உங்களுக்கு ஏர்டெல்லின் ரூபாய் 179 ரீசார்ஜ் திட்டத்தை  குறித்து சொல்லப் போகிறோம். சுமார் ஒரு மாதம் செல்லுபடியாகும் இந்த திட்டங்களின் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | ரூ.11 ஆயிரத்தில் iPhone 14 Pro! இவ்வளவு மலிவான விலையில் ஐபோன்..!

ரூபாய் 179 ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல்லின் ரூ.179 திட்டம் 28 நாள்களுக்கு செல்லுபடியாகும். இந்த ஏர்டெல் திட்டமானது 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்புடன் மொத்தம் 300 எஸ்எம்எஸ்-ஐ வழங்குகிறது. கூடுதலாக இந்த ரீசார்ஜ் திட்டத்தில், ஹலோ ட்யூன்ஸ், Wynk Music-கான இலவச அணுகலை வழங்குகிறது.

மேலும் படிக்க | Cheapest Smartphone: வெறும் ரூ.6,499-க்கு கிடைக்கும் அட்டகாசமான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்

எப்படி ரீசார்ஜ் செய்வது
ஏர்டெல்லின் ரூ.179 திட்டத்தை நீங்கள் https://www.airtel.in/recharge/prepaid?icid=header இல் பெற முடியும். மேலும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் Google Pay, PhonePe, paytm உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோ, பிஎஸ்என்எல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட போட்டிப்போட்டுக் கொண்டு ஏர்டெல் குறைந்த விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க | Flipkart Big Saving Days 2023: வெறும் ரூ.599-க்கு ஸ்மார்ட்போன்கள், பிளிப்கார்ட் அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News