ITR Refund: பெரும்பாலான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விட்டார்கள். இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் அபராதத்துடன் இதை தாக்கல் செய்யலாம்.  வருமான வரி கணக்கை தாக்கல் செய்த பலர் ஐடிஆர் ரீஃபண்டுக்காக (ITR Refund) காத்திருக்கிறார்கள். சிலருக்கு ரீஃபண்ட் கிடைத்துவிட்டது. சிலருக்கு ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமான வரி ரீஃபண்ட் எப்படி கிடைக்கும்?


வருமான வரி ரீஃபண்டுக்காகக் காத்திருக்கும் நபர்களுக்கு, வருமான வரி ரிட்டன் (Income Tax Return) தாக்கல் செய்யும் போது குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, ஐடிஆர் ரீஃபண்ட் தொகை தொகை மின்னணு முறையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் வருமான வரி ரீஃபண்ட் தொகை இன்னும் வரவில்லை என்றால், அது சில காரணங்களால் இருக்கலாம். அந்த காரணங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


தவறான வங்கிக் கணக்கு விவரங்கள்:


தவறான வங்கிக் கணக்கு விவரங்கள் வருமான வரி ரீஃபண்ட் தாமதத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. வரி போர்ட்டலில் வழங்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் செல்லாத விவரங்களாக இருந்தால் ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதன் ஏற்படும். ரீஃபண்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு தவறானதாகவோ அல்லது செயலற்றதாகவோ இருந்தால், பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையில் முடக்கம் அல்லது தாமதம் ஏற்படலாம். 


Form 26AS அல்லது AIS பொருந்தவில்லை என்றால்:


TDS விலக்குகளில் செய்யப்பட்டுள்ள க்ளெய்ம்கள் படிவம் 26AS அல்லது வருடாந்திர தகவல் அறிக்கை (Annual Information Statement) அதாவது AIS -இல் வழங்கப்பட்ட விவரங்களுடன் பொருந்த வேண்டும் என்பதை வரி செலுத்துவோர் அறிந்திருப்பது மிக முக்கியம். 


வருமான வரி அறிக்கையில் தவறான விவரங்கள்:


ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்யும் போது வரி செலுத்துவோர் (Taxpayers) சிறு தவறுகளை செய்து விடுவதுண்டு. இந்த பிழைகளில் தவறான தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களும் அடங்கும். இப்படிப்பட்ட தவறுகள் கண்டறியப்பட்டால் ரீஃபண்ட் பெற தாமதம் ஆகலாம்.


அதிகரித்த ஆய்வு மற்றும் தானியங்கு செயல்முறைகள்:


வருமான வரித் துறை (Income Tax Department), AI கருவிகளைப் பயன்படுத்தி, செயல்முறையை ஆட்டோமேடட் அதாவது தானியக்க செயல்முறையாக்கி வருமான வரி கணக்குகளின் ஆய்வை இன்னும் மேம்படுத்தியுள்ளது. ஆகையால் இந்த மேம்படுத்தப்பட்ட மறுஆய்வு முறையின் காரணமாக ஐடிஆர் -இல் சிறிய தவறுகள் இருந்தாலும் கூட அது தாமதத்திற்கு வழிவகுக்கலாம்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு கணக்கீடு இதோ


ஐடிஆர் ரீஃபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்படாமல் இருக்க வரி செலுத்துவோர் என்ன செய்ய வேண்டும்?


வங்கிக் கணக்கு விவரங்களைச் சரிபார்க்கவும்:


வருமான வரி போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் சரியானவையா என்பதையும் செயலில் உள்ளனவா என்பதையும் வரி செலுத்துவோர் உறுதிப்படுத்த வேண்டும்.


வருமான வரி கணக்கின் துல்லியத்தை இருமுறை சரிபார்க்கவும்:


ஐடிஆர் ரீஃபண்ட் தாமதமாகாமல் இருக்க வரி செலுத்துவோர் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை நன்றாக க்ராஸ் செய்க் செய்ய வேண்டும். 


ரீஃபண்ட் ஸ்டேடசை கண்காணிக்கவும்:


வரி செலுத்துவோர் வருமான வரித் துறையின் போர்டல் மூலம் ஆன்லைனில் ரீஃபண்ட் ஸ்டேடசை கண்காணிக்க வேண்டும். உங்கள் ரிட்டர்ன் நிராகரிக்கப்பட்டால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வெண்டும்.


ITR E-Verification


வருமான வரி ரிட்டன் (ITR) ரீஃபண்டைச் செயல்படுத்த, வருமான வரி கணக்கின் மின் சரிபார்ப்பு அதாவது ஈ-வெரிஃபிகேஷன் அவசியமாகும். ஐடிஆர் ஈ-வெரிஃபை செய்யப்பட்ட பின்னர், நான்கைந்து வாரங்களுக்குள் ரீஃபண்ட் தொகை வரி செலுத்துவோரின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.


மேலும் படிக்க | SCSS: மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: அதிக லாபம், அபார பாதுகாப்பு.. விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ