இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம், Belated ITR தாக்கல் செய்வதற்கான வழிமுறை இதோ

ITR Filing: ஜூலை 31, 2024 அன்று இரவு 7 மணி வரை ஏழு கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் (ITR) தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 3, 2024, 04:23 PM IST
  • ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?
  • Belated Return என்றால் என்ன?
  • ஜூலை 31க்குப் பிறகு பிலேடட் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி?
இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம், Belated ITR தாக்கல் செய்வதற்கான வழிமுறை இதோ title=

ITR Filing: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 அன்று முடிவடைந்தது. பெரும்பாலான மக்கள் இந்த கடைசி தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்து விட்டார்கள். இருப்பினும், இன்னும் வரி செலுத்துவோர் பலர் இந்த செயல்முறையை முடிக்காமல் உள்ளனர். ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தெதியை தவறவிட்டவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். 

ஜூலை 31, 2024 அன்று இரவு 7 மணி வரை ஏழு கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் (ITR) தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
 
ITR ஐ தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர், தாமதமாக தாக்கல் செய்வதற்கு சில அபராதங்கள் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், அதிக சிக்கல்களைக் குறைக்க, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் செயல்முறையை விரைவில் முடிப்பது முக்கியம். ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தெதியான ஜூலை 31 -ஐ தவறவிட்டவர்கள் பிடேலட் ஐடிஆர் -ஐ (Belated ITR) தாக்கல் செய்யலாம். 

Belated Return என்றால் என்ன?

- வருமான வரி சட்டத்தின் (Income Tax Act) பிரிவு 139(4) இன் கீழ் பிலேடட் ரிடர்ண் என்பது காலக்கெடு முடிந்த பிறகு தாக்கல் செய்யப்படும் ரிட்டர்ன் அதாவது வருமான வரி கணக்காகும். 

- ஜூலை 31 காலக்கெடுவைத் தவறவிட்ட வரி செலுத்துவோர் தாமதமாக வருமான வரி கணக்கைத் (Income Tax Return) தாக்கல் செய்யலாம்.

- தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டில், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தனிநபர்கள் பிலேடட் ஐடிஆர் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் செய்ய புதிய விதிகள் அறிமுகம்

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள்

- ஜூலை 31க்குப் பிறகு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தால், ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும். எனினும் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் ரூ.1,000 செலுத்தினால் போதும்.

- வரி செலுத்த வேண்டிய நபராக நீங்கள் இருந்தால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234A இன் படி, ஆகஸ்ட் 1 முதல் வரியைச் செலுத்தும் வரை மாதத்திற்கு 1 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும்.

- ஜூலை 31க்குப் பிறகு உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், பழைய வரி முறையின் (Old Tax Reggime) கீழ் விலக்குகளைப் பெறுவதற்கான உரிமையை இழப்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால், இந்த ஆண்டின் மூலதன இழப்புகளை வரும் ஆண்டுகளுக்கு உங்களால் எடுத்துச் செல்ல முடியாது.

Belated ITR: ஜூலை 31க்குப் பிறகு பிலேடட் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? 

- ஸ்டெப் 1: www.incometaxindiaefiling.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

- ஸ்டெப் 2: உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும். நீங்கள் புதிய பயனராக இருந்தால், உங்கள் PAN விவரங்களைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.

- ஸ்டெப் 3: உங்கள் வருமான ஆதாரம் மற்றும் வகையின் அடிப்படையில் பொருத்தமான ஐடிஆர் படிவத்தைத் (ITR Form) தேர்ந்தெடுக்கவும்.

- ஸ்டெப் 4: தொடர்புடைய அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

- ஸ்டெப் 5: நீங்கள் செலுத்த வேண்டிய வரியைக் கணக்கிடவும்.

- ஸ்டெப் 6: பொருந்தக்கூடிய வட்டி மற்றும் அபராதக் கட்டணங்களை இதனுடன் சேர்க்கவும்.

- ஸ்டெப் 7: தாமதக் கட்டணம் மற்றும் நிலுவையில் உள்ள வரிகளைச் செலுத்த மின்-கட்டண வசதியைப் பயன்படுத்தவும். 

- ஸ்டெப் 8: மதிப்பீட்டு ஆண்டையும் எந்தப் பிரிவின் கீழ் நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள் என்பதையும் சரியாக குறிப்பிடுவதை உறுதிசெய்துகொள்ளவும்.

- ஸ்டெப் 9: படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, அதை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். 

- ஸ்டெப் 10: ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது CPC பெங்களூருவுக்கு ஒரு நகலை அனுப்பி உங்கள் வருமான வரி கணக்கை வெரிஃபை செய்யவும். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: பூஜ்ஜியம் ஆகிறதா அகவிலைப்படி? டிஏ ஹைக் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News