Diwali Loan Offers: இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. தீபாவளிக்கு மறுபெயரே கொண்டாட்டம்தான்!! இந்த நாளில் நாம் நமது உற்றார் உறவினருடன் சேர்ந்து இனிப்புகளையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொள்கிறோம். புத்தாடை அணிந்து புதுமையை வரவேற்கிறோம். வீட்டிற்கு தேவையான புது பொருட்களையும் வாங்குகிறோம். அப்படி தீபாவளியின் போது அதிகம் வாங்கப்படும் பொருட்களில் கார்களும் முக்கியமானவை. தீபாவளி நேரத்தில் பலர் புது கார் வாங்குவதுண்டு. பலர் வீடு வாங்குவதற்கான பணிகளில் இறங்குவதும் உண்டு. நீங்களும் இந்த தீபாவளியில் புதிய கார் அல்லது வீடு வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நெரத்தில் இவற்றை வாங்கினால், நீங்கள் அவற்றுக்கு ஆகும் கடன் தொகையில் அதிகம் சேமிக்க முடியும். நாட்டின் பல வங்கிகள் பண்டிகை சலுகைகளை வழங்கியுள்ளன. அவற்றை பற்றி இங்கு விரிவாக காணலாம்.


தீபாவளி கொண்டாட்டங்களின் துவக்கமாக தன த்ரயோதசி அதாவது தன்தேரஸ் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் செய்யப்படும் செயல்கள் விருத்தி மற்றும் செழிப்பை தரும். இந்த நாளில் வீட்டிற்கு ஏதாவது பொருட்களை வாங்குவது சுபமாக கருதப்படுகின்றது. இந்த ஆண்டு தன்தேராஸ் அல்லது தீபாவளியன்று நீங்கள் கார் அல்லது வீடு வாங்கினால், கடன் தொகையில் பெரிய அளவில் சேமிக்கலாம். நாட்டின் பல பெரிய வங்கிகள் பண்டிகைக் கால சலுகைகளை வழங்குகின்றன. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) ஆகியவை அடங்கும். பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தீபாவளி 2023 -இல் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் ‘தீபாவளி தமாகா 2023’ (Diwali Dhamaka 2023) என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த சலுகையின் கீழ், பிஎன்பி வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 8.4% என்ற குறைந்த வட்டியில் வீட்டுக் கடனைப் பெறலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது. பாங்க் ஆஃப் பரோடா (BoB) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) உட்பட பல வங்கிகளும் வீட்டுக் கடன்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் 2023 பண்டிகை கால சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.


PNB சிறப்பு சலுகைகள்


பிஎன்பி வாடிக்கையாளர்கள் 8.75% வட்டி விகிதத்தில் கார் கடனைப் பெறலாம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தெரிவித்துள்ளது. இதனுடன், இதற்கான செயலாக்க மற்றும் ஆவணப்படுத்தல் கட்டணங்களும் பூஜ்ஜியமாக இருக்கும். PNB-ல் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு, வட்டி விகிதம் 8.4% முதல் தொடங்குகிறது. வங்கி இதிலும் எந்த செயலாக்கக் கட்டணம் அல்லது ஆவணக் கட்டணமும் வசூலிக்காது.


மேலும் படிக்க | EPFO சந்தாதாரர்களுக்கு சூப்பர் செய்தி: தீபாவளி பரிசாக கணக்கில் வட்டித்தொகை... உடனே செக் செய்யுங்கள்


எஸ்பிஐ வழங்கும் சலுகைகள் என்ன? 


ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும் (SBI) தீபாவளி 2023-ஐக் (Diwali 2023) கருத்தில் கொண்டு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கிரெடிட் பீரோ ஸ்கோரின் அடிப்படையில் டேர்ம் லோன் வட்டி விகிதங்களில் தள்ளுபடி வழங்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு SBI வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் (CIBIL Score) 700 முதல் 749 வரை இருந்தால், அவர் 8.7% வட்டி விகிதத்தில் டேர்ம் லோனைப் பெறலாம். இது தவிர, வீட்டுக் கடன் (Home Loan) வாங்குபவர்களுக்கு கடன் மதிப்பெண் 700 மற்றும் அதற்கு மேல் இருந்தால் கூடுதல் வட்டி விகிதத் தள்ளுபடி (0.2%) வழங்கப்படும்.


BOB வழங்கும் சலுகைகள் என்ன? 


பாங்க் ஆஃப் பரோடாவின் சிறப்பு பண்டிகை பிரச்சாரமான ‘Feeling of Festival with BOB’ டிசம்பர் 31, 2023 வரை இயங்கும். இந்த சிறப்பு பிரச்சாரத்தின் கீழ், வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 8.4% முதல் தொடங்குகின்றன. மேலும் வங்கி செயலாக்கக் கட்டணமாக எதையும் வசூலிக்காது. கூடுதலாக, BoB வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 8.7% முதலான வட்டி விகிதத்தில் கார் கடன்களைப் பெறலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது. கார் (Car Loan) மற்றும் கல்விக் கடன்கள் இரண்டிற்கும், BOB வாடிக்கையாளர்கள் எந்த செயலாக்கக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று வங்கி தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | கடனை செலுத்தாதவர்களுக்கு தனி பட்டியல்: கிடுக்கிப்பிடி போடும் ரிசர்வ் வங்கி.... உஷார்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ