இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனால் பிரபல ஓடிடி தளங்கள் கடும் நெருக்கடியை சந்திக்க உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ சிம் மூலம் டிஜிட்டல் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது ஜியோ சினிமா மூலம் மீண்டும் ஓடிடி உலகில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. நெட்ஃபிலிக்ஸ்-அமேசான் போன்ற ஓடிடி தளங்களில் வருடாந்திர சந்தாக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. மூன்று மாதங்கள் திட்டங்களுக்கு கூட 500 ரூபாய்க்கு மேல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் பிரீமியம் வருடாந்திர விளம்பரமில்லாத சந்தா திட்டத்தை 299 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | லட்சங்களில் வட்டி வருமானம் கொடுக்கும்... அஞ்சலக FD சேமிப்பு திட்டம்...!


நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற பிரபலமான ஓடிடி தளங்களில் உள்ள படங்களை பார்க்க அதிக செலவாகி கொண்டு இருந்த நிலையில், ஜியோவின் இந்த புதிய வருடாந்திர திட்டம் வெறும் 299 ரூபாய்க்கு அறிமுகமாகி மற்ற நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. வருடத்திற்கு ரூ. 299 கொடுத்து ரீசார்ஜ் செய்தால் ஜியோ சினிமா ஓடிடியில் எந்த விளம்பரமும் இல்லாமல் படங்கள் மற்றும் வெப் சீரிஸை பார்க்க முடியும். ஓடிடி தளங்களில் மிக குறைந்த சந்தா திட்டங்களை கொண்டது ஜியோ தான் என்று கூறப்படுகிறது. விளம்பரமில்லா உள்ளடக்கத்தை அனுபவிக்க விரும்பும் பயனர்களுக்கு இது பொருத்தமானது.


ஜியோ பிரீமியம் ஆண்டு திட்டம்


இந்த புதிய பிரீமியம் திட்டத்தில் சந்தா கட்டினால், ஒரு வருடத்திற்கு எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் ஜியோ சினிமாவில் உள்ள அனைத்து படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை 4K தரத்தில் பார்த்து அனுபவிக்க முடியும். மேலும் கூடுதலாக மொபைல் ஆப்பில் படங்களை டவுன்லோடு செய்தும் பார்த்து கொள்ள முடியும். ரூ. 299 திட்டத்தில் பிரத்யேக வெப் தொடர்கள், திரைப்படங்கள், ஹாலிவுட் படங்கள், குழந்தைகளுக்கான  நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்குகளை தொடர்களை பார்க்கும் வசதியையும் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். இந்த புதிய வருடாந்திர பிரீமியம் ஜியோ சினிமா திட்டம் தற்போது பயனர்களுக்கு கிடைக்கிறது. ஜியோ சினிமா இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் இதற்கான கட்டணத்தை செலுத்த முடியும்.


ஜியோ சினிமா மாதாந்திர திட்டம்


ஜியோசினிமாவின் மாதாந்திர திட்டம் வருடாந்திர திட்டத்தை விட சிறந்தது. ஒரு மாதத்திற்கு ரூ. 29 கட்டணமாக செலுத்தி ஜியோ சினிமாவை பார்க்க முடியும். இருப்பினும், வருடாந்திர சந்தா திட்டத்துடன் ஒப்பிடும் போது ரூ.49 கூடுதலாக செலுத்த வேண்டி உள்ளது. மாதத்திற்கு ரூ.59 என்ற வழக்கமான விலையுடன் ஒப்பிடும்போது புதிய திட்டம் மிகவும் மலிவு. ஜியோ சினிமாவின் இந்த புதிய சந்தா திட்டத்தால் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற தளங்கள் வருத்தத்தில் உள்ளனர். இது போன்ற பிரபல தளங்களில் மொபைல் பயன்பாடு சந்தா எடுத்தால் கூட குறைவான தரத்தில் தான் வீடியோ கிடைக்கும்.


மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ