கார் ஏற்றுமதியை அதிகரிக்க கியா மோட்டார்ஸ் உடன் ஒப்பந்தம்!
கார் ஏற்றுமதியை அதிகரிக்க கியா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் சென்னை துறைமுகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆனது 2029-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிகிறது!
கார் ஏற்றுமதியை அதிகரிக்க கியா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் சென்னை துறைமுகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆனது 2029-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிகிறது!
சென்னைத் துறைமுகம் வழியாக, கியா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் சென்னைத் துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இடையே கையெழுத்தானது.
துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் பி. ரவீந்திரன், கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாங் சூ கிம், க்ளோவிஸ் அனந்தபூர் நிர்வாக இயக்குநர் ஜிம் யங் கிம் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆந்திராவில் உள்ள ஆனந்தபூரில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கார்கள் இனிமேல் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஒப்பந்தம் ஆனது 2029-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிகிறது.
முன்னதாக, கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஹூண்டாய் மேட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக 2028-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் ஒரே நேரத்தில் 1 லட்சம் கார்களை நிறுத்தும் அளவிற்கு இட வசதி உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஆகஸ்டு மாதம் வரை 79,530 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 52,948 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. சென்னை துறைமுகத்தின் வர்த்தகத்தை அதிகரிக்க கண்டெய்னர்களுக்கு கட்டண சலுகை, உடகட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சென்னை துறைமுகம் செய்துவருகிறது.
எனவே துறைமுகம் மற்றும் துறைமுக பயன்படுத்துவோர்கள் உள்ளிட்ட இருவரும் பயன்படுத்தும் வகையில் நீண்ட கால ஒப்பந்தங்களை கையெழுத்திட தயாராக உள்ளதாக சென்னை துறைமுகம் தெரிவித்துள்ளது.