பெட்ரோல் - டீசலுக்கு மாற்றாக ஆட்டமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த இருக்கிறது லித்தியம். இதன் பயன்பாடு காரணமாக எரிபொருள் பயன்பாடு என்பது முற்றிலும் வழங்கொழிந்து போகும் என இப்போதைக்கு யூகிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஆற்றல் மிக்க லித்தியத்தின் இருப்பு இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ரியாசி மாவட்டத்தில் சலால்-ஹைமானா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு 5.9 மில்லியன் டன்கள் லித்தியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால், உலகிலேயே அதிக லித்தியம் புதையல் இருக்கும் இடமாகவும் ஜம்மு காஷ்மீர் மாறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லித்தியம் ஆய்வு ஏன்?


உலகம் இப்போது மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவும் 2030 ஆண்டுக்குள் ஆட்டோமொபைல் துறையில் 70 விழுக்காடுக்கும் மேலாக மின்சார வாகன உற்பத்தி இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கிறது. அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் மின்சார வாகனங்களின் பேட்டரிக்கு தேவையான லித்தியம் மூலப் பொருட்கள் அவசியம். அதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் லித்தியம் ஆய்வு நடத்தப்பட்டதில் கர்நாடகாவிலும், ஜம்மு காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ’லித்தியம் புதையல்’ ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிப்பு..! 5.9 மில்லியன் டன்


லித்தியம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?


ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் ரீச்சார்ஜிபிள் பேட்டரிகளின் உற்பத்திக்கு லித்தியம் அவசியம். மருந்துகள் தயாரிப்பு, ராணு தளவாடங்கள் உற்பத்தி, கைவினை பொருட்கள் உற்பத்தி, மின்சாதன பொருட்கள் ஆகியவற்றுக்கும் லித்தியம் அவசியம். 


தற்போது சீனா, ஹாங்ஹாங் ஆகியவையே உலகில் அதிகளவு லித்தியம் பேட்டரிகளை உற்பத்தி செய்கின்றன. இப்போது இந்தியாவில் லித்தியம் படிமம் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இதன் மூலம் பேட்டரி தயாரிப்பு துறையில் உலகளவில் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் ஒன்றாக வளர முடியும் என யூகிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் உள்நாட்டு தேவைகளையாவது பூர்த்தி செய்து கொள்ளலாம். 


லித்தியம் பிரித்தெடுப்பதில் சிக்கல்


மிகப்பெரியளவில் இந்தியாவிடம் லித்தியம் இருந்தாலும், அதனை பிரித்தெடுப்பதில் மிகப்பெரிய சவால் இருக்கிறது. லித்தியத்தை பொறுத்தவரை அதனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்ப முறை மிகவும் சிக்கலானது. அவற்றை மேற்கொள்ள நினைத்தால் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் தேவைப்படுகிறது. கூடுதலாக, லித்தியம் சுரங்கத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் ஒரு முக்கிய கவலையாக உள்ளது. 


சீனாவை பின்னுக்கு தள்ளும்


இந்த சவால்களை இந்தியா திறம்பட சமாளித்து லித்தியத்தை பிரித்து லித்தியம் அயன் பேட்டரிகளை இந்தியாவில் தயாரிக்கும்பட்சத்தில் உலகில் லித்தியம் பேட்டரி தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவுக்கு போட்டியாக இந்தியாவும் வளர முடியும். ஆனால், அதற்கு நீண்ட நெடிய பயணமும், நடைமுறை சிக்கல்களும், அடிப்படை கட்டமைப்புகள் முதலீடுகள் உள்ளிட்டவை எல்லாம் அவசியம். அதேநேரத்தில் சீனாவை பொறுத்தவரை இப்போதைய சூழலில் உலகில் இருக்கும் லித்தியத்தை பிரித்தெடுத்து பதப்படுத்தி சுத்திகரிப்பதற்கு தேவையான கட்டமைப்புகளில் 60 விழுக்காடு அந்நாட்டிடம் இருக்கிறது. 



எலோன் மஸ்க் கூட ஒருமுறை லித்தியம் சுத்திகரிப்பு குறித்து பேசும்போது, " லித்தியம் சுரங்க பணிகள் என்பது எளிதானது. ஆனால் அதன் சுத்திகரிப்பு என்பது மிகவும் கடினமானது. லித்தியம் சுத்திகரிக்கப்புக்கு பெரிய அளவிலான இயந்திரங்கள் தேவை. மேலும் மிகப்பெரிய சவால்கள் இருக்கின்றன" என தெரிவித்திருந்தார்.


லித்தியம் எப்படி பிரிக்கப்படுகிறது?


லித்தியம் சுத்திகரிப்பு என்பது ஒரு சிக்கலான மற்றும் சவாலான செயல்முறையாக இருக்கலாம். இது லித்தியத்தின் ஆதாரம் மற்றும் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் முறையைப் பொறுத்தது. லித்தியத்தின் மிகப்பெரிய ஆதாரம் ஸ்போடுமீன், பெட்டலைட் மற்றும் லெபிடோலைட் போன்ற கனிமங்களிலிருந்து பெறப்படுகிறது. இதற்கு மிகப்பெரிய செயலாக்கம் அவசியம். அதாவது, அந்த தாதுவை நசுக்கி, பின்னர் நுரை மிதத்தல், காந்தப் பிரிப்பு மற்றும் புவியீர்ப்பு பிரிப்பு போன்ற பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி லித்தியம் பிரிக்கப்படுகிறது. இவையனத்தும் நியாயமான முறையில் தயாரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டால், இந்தியா சீனாவுக்கு எதிராக போட்டியிட முடியும்.


மேலும் படிக்க | கிறுகிறுக்க வைக்கும் ஜம்மு காஷ்மீர் லித்தியம் புதையலின் மதிப்பு..! இத்தனை கோடிகளா?


மேலும் படிக்க | Lithium Battey: அடிக்கடி தீ விபத்தில் சிக்கும் மின்சார வாகனங்கள்...! தவிர்க்க சிறந்த வழி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ