பணியாளர் தேர்வாணையம் (SSC) 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு, 2020 டிசம்பர் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டித் தேர்வுக்கான அறிவிப்பையும் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த அரசு வேலைக்குத் (Government Jobs) தேவையான தகுதி உங்களுக்கு இருந்தால், 2020 டிசம்பர் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


காலியிடம் தொடர்பான முக்கிய தகவல்கள்:


தேர்வின் பெயர் - SSC CHSL Exam 2020
பதவியின் பெயர் - எல்.டி.சி (LDC), ஜே.எஸ்.ஏ (JSA), பி.ஏ (PA), எஸ்.ஏ (SA) மற்றும் டி.இ.ஓ.(DEO)


காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை - இன்னும் குறிப்பிடப்படவில்லை, பின்னர் இணையதளத்தில் பதிவேற்றப்படும்


தகுதி - 12 வது தேர்ச்சி
ஊதியம் - மாதத்திற்கு ரூ .29,200-92,300 வரை
வேலை இடம் - இந்தியா முழுவதும்
வயது வரம்பு - 18 முதல் 27 வயது வரை (வயது கணக்கீடு ஜனவரி 1, 2021 அன்று உள்ள வயது கணக்கிடப்படும் மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின்படி அதிகபட்ச வயது தளர்வு வழங்கப்படும்)


விண்ணப்ப கட்டணம்


பணியாளர்கள் தேர்வு ஆணையம் நடத்தும் இந்த தேர்வில் எழுதும் பொது பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்கள் ரூ.100ஐ விண்ணப்பக் கட்டணமாக டெபாசிட் செய்ய வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் அல்லது சலான் மூலம் கட்டணம் செலுத்தலாம். இது தவிர, எஸ்சி (SC), எஸ்டி (ST), பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் வரும் மாணவர்கள் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.


பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் இந்த தேர்வில், ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பத்தை தேவையான தகவல்கள் மற்றும் இணைப்புகளுடன் பூர்த்தி செய்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://ssc.nic.in/ இல் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கும் முன் விண்ணப்ப படிவத்தை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க மறக்காதீர்கள்.


ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி - 6 நவம்பர் 2020


ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி - 15 டிசம்பர் 2020


ஆஃப்லைனில் சலான் வாங்குவதற்கான கடைசி தேதி - 17 டிசம்பர் 2020


ஆஃப்லைன் மூலம் சாலான் செலுத்தும் கடைசி தேதி மற்றும் நேரம் - டிசம்பர் 19ம் தேதி, 2330  வரை


சலான் மூலம் கட்டணத்தை டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி - 21 டிசம்பர் 2020


தேர்வு தேதி - 2021 ஏப்ரல் 12 முதல் 27 வரை


ALSO READ |  ஆபரேஷன் செய்யும் போது மருத்துவர்கள் ஏன் நீலம் அல்லது பச்சை நிற ஆடையை அணிகிறார்கள்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR