மத்திய அரசு சாதாரண மக்களுக்கு காப்பீடு வசதியை வழங்குகிறது. இந்த காப்பீடு பிரதம மந்திரி பொதுமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அதாவது ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. 2024 பட்ஜெட்டில் PMJAY காப்பீட்டுத் தொகையை அரசாங்கம் அதிகரிக்கலாம் என அதகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் சாமானிய மக்களுக்கு அரசு ரூ.5 லட்சம் தொகைக்கான காப்பீடு வழங்குகிறது. PMJAY இன் காப்பீட்டுத் தொகையை 5 லட்சத்தில் இருந்து 10 முதல் 15 லட்சமாக அரசாங்கம் உயர்த்தலாம் என கூறப்படுகிறது. மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்னும் மருத்துவ சேவைக்கான திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. மக்களுக்கான இந்த இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக  திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு நிதியும் ஒதுக்கீடு செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவ காப்பீட்டு அட்டை பெற விண்ணப்பிப்பது மிக எளிது தான். இதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


1. முதலில் healthid.ndhm.gov.in என்னும் மத்திய அரசின் இணைய தளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.


2. இந்த இணையதளத்துக்குள் நுழைந்ததும் Create ABHA Number என்ற லின்க இருக்கும். அந்த எண்ணை பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய அடையாளத்தை உறுதி படுத்த ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசன்ஸை ஆதாரமாகக் கொடுக்கலாம்.


3. ஆதார் எண்ணை வைத்து உள் நுழையும்போது உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த எண்ணை பதிவிட்டு லாக்இன் வேண்டும்.


4. லாக் இன் செய்தது, உங்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை தோன்றும். இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 


சமீபத்தில், ஆயுஷ்மான் பாரத் உடல் நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களை 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. முன்னதாக  'ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்' என அழைக்கப்பட்டன.


மேலும் படிக்க | ஆதார் அட்டை இலவச அப்டேட்: சூப்பர் செய்தி... காலக்கெடு மார்ச் 14 வரை நீட்டிக்கப்பட்டது!!


காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க திட்டமிடும் அரசு


PMJAY இன் கீழ் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையை அரசாங்கம் 5 லட்சத்தில் இருந்து 10 முதல் 15 லட்சமாக உயர்த்தலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ், 60 கோடி மக்களை சுகாதார காப்பீட்டில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018 பட்ஜெட்டில் மோடி அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன, முதலில் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கவும், இரண்டாவதாக ஒரு லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் கட்டவும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.


PMJAY திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் 


PMJAY  திட்டத்தின் கீழ், நாட்டின் எந்த அரசு மற்றும் தனியார் துறை மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை வசதி கிடைக்கும். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னும் ஏற்படும் மருத்துவ செலவுகள் இந்த காப்பீட்டில்  இத்திட்டத்தின் கீழ், கொரோனா, புற்றுநோய், சிறுநீரகம், இதய நோய், டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, டயாலிசிஸ், முழங்கால் போன்றவற்றுக்கு சிகிச்சைகளையும் பெற முடியும்.


பிப்ரவரி 1, 2024 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்


பிப்ரவரி 1, 2024 அன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முழு பட்ஜெட் வரை முக்கிய அறிவிப்புகள் வெளியாக காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஜூலையில் முழு பட்ஜெட் வரும். மக்களவைத் தேர்தல் 2024 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து, மத்தியில் ஆட்சி அமைக்கும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.


மேலும் படிக்க | UPI: தவறான எண்ணுக்கு பணம் சென்றுவிட்டதா? கவலை வேண்டாம்.. 48 மணி நேரத்தில் ரீஃபண்ட் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ