கோடீஸ்வரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஆனால் அது உண்மையில் அவ்வளவு எளிதானதா? அத்தனை சுலபமாக ஒருவரால் கோடீஸ்வரராகவோ லட்சாதிபதியாகவோ உயர்ந்துவிட முடியுமா? இதற்கு பதில் ஒன்றுதான். கோடீஸ்வரர் ஆவதற்கு குறுக்குவழி எதுவும் கிடையாது. சில முதலீடுகள் (Investment) முறையாக செய்யப்பட்டால், அப்படி ஆவது கடினமான விஷயமும் கிடையாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரி, இந்த முறையான முதலீட்டை எப்படி தொடங்குவது என்பது மிகப்பெரிய கேள்வி. Warren Buffet, அவர் 11 வயதாக இருந்தபோதே பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கினார். இன்று அவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீங்களும் ஒரு நாளைக்கு 30 ரூபாய் மட்டுமே சேமித்து ஒரு கோடீஸ்வரராக முடியும். ஆம்!! எப்படி என்று இங்கே பார்க்கலாம்.


உங்கள் வயது 20 என்றால், தினமும் 30 ரூபாய் சேமிக்கவும்


நீங்கள் 20 வயதில், தினமும் 30 ரூபாய் சேமிக்கத் துவங்கினால், அறுபது வயதில் நீங்கள் கோடீஸ்வரராக முடியும். ஒரு நாளைக்கு 30 ரூபாய் டெபாசிட் என்றால் ஒரு மாதத்தில் 900 ரூபாய். இந்த பணத்தை ஒவ்வொரு மாதமும் SIP (முறையான முதலீட்டு திட்டம்) இல் முதலீடு செய்யுங்கள். 40 ஆண்டுகள், ஒவ்வொரு மாதமும் 900 ரூபாயை மட்டுமே முதலீடு செய்து நீங்கள் கோடீஸ்வரராகலாம்.


- மிஸ்டர் எக்ஸின் வயது 20 வயது என்று வைத்துக்கொள்வோம்.


- அவர் 40 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் 30 ரூபாய் சேமிக்கிறார்.


- ஒவ்வொரு மாதமும் 900 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்.


- மியூச்சுவல் ஃபண்டுகளில் சராசரியாக அவருக்கு 12.5 சதவீத வீதத்தில் பணம் திரும்பக் கிடைக்கும்.


- 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோடீஸ்வரராகி விடுவார்.


நீங்கள் 20 வயதைக் கடந்து விட்டிருந்தால், இப்போது முதலீடு செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. உங்களுக்கு 30 வயது என்றால், 1 கோடி என்ற இலக்கை அடைய, நீங்கள் 30 ரூபாய்க்கு பதிலாக 95 ரூபாயை தினமும் டெபாசிட் செய்ய வேண்டும்.


40 ஆண்டு காலம் என்பது உங்களுக்கு மிகவும் அதிகமாகத் தோன்றினால், இதை விட குறைவான கால அளவிற்கும் நீங்கள் முதலீடு செய்யலாம். இதில் 12 சதவீதம் வரை உங்களுக்கு சராசரி வருவாய் கிடைக்கும். நீங்கள் 35 ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டில் (Mutual Fund) டிவிடெண்ட் மறு முதலீட்டு திட்டத்தில் (DRIP) முதலீடு செய்தால், உங்களுக்கு 15% வருவாய் விகிதம் கிடைக்கும்.


ALSO READ: FD-யா, RD-யா: எதில் சேமிக்கலாம்? உங்களுக்கான சிறந்த முறை எது? தெரிஞ்சுக்கலாம் வாங்க!!


ஈவுத்தொகை மறு முதலீட்டு திட்டம்


ஈவுத்தொகை மறு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ஈவுத்தொகையைப் பெறுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், முதலீடு செய்ய வேண்டிய தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது மற்றும் வருமானமும் அதிகரிக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 6 சதவீதம் ஈவுத்தொகையைப் பெற முடியும். இது மியூச்சுவல் ஃபண்டின் வகை மற்றும் பங்குகளைப் பொறுத்தது.


Diversified Mutual Fund-களுக்கு பதிலாக, நீங்கள் சிறிய அல்லது Midcap Fund-களிலும் முதலீடு செய்யலாம். அவை 25-30 வருடங்களுக்கும் குறைவான கால அளவைப் பெற்றிருக்கும். இவற்றில் ஆபத்து அதிகமாக இருக்கும் அதே வேளையில், நன்மையும் அதிகம் இருக்கும்.


RD-யும் ஒரு நல்ல தேர்வாகும்


ஒவ்வொரு மாதமும் 5500 ரூபாய் RD டெபாசிட் செய்து ஒருவர் கோடீஸ்வரராக முடியும். இதற்காக, முதலில் வங்கியில் ஒரு RD கணக்கைத் திறந்து, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யுங்கள். உங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 9 சதவீதம் என்ற அளவில் வட்டி கிடைத்தால், நீங்கள் முப்பதே ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம். இதை விட குறைந்த நேரத்தில் நீங்கள் கோடீஸ்வரராக விரும்பினால்


- 25 ஆண்டுகளுக்கு ரூ .9000


- 20 ஆண்டுகளுக்கு ரூ .15000


- 15 ஆண்டுகளுக்கு ரூ .26400


- 10 ஆண்டுகளுக்கு ரூ. 51500 என டெபாசிட் செய்யப்பட வேண்டும்.


ALSO READ: Loan Moratorium Period: அக்டோபர் 1-க்குள் மத்திய அரசு விளக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!!