மின்சார கட்டணம் முதல் FD வரை.. ICICI வங்கியின் அசத்தல் WhatsApp சேவை..!!!
இப்போது FD, கேஸ் பில் அல்லது மொபைல் பில் ஆகியவற்றுக்காக, தனி தனி செயலிகளை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் இந்த வசதிகளை வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்துவது வாட்ஸ்அப்பில் சேட் செய்வது போல எளிதானது.
புதுடெல்லி: வாட்ஸ்அப் இனி சேட்டிங்கிற்கான செயலி மட்டுமல்ல. ICICI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப்பில் மேலும் பல சேவைகளை தொடங்க அறிவித்துள்ளது. வாட்ஸ்அப்பில் நிலையான வைப்பு தொகை FD திறப்பதில் இருந்து மின்சார கட்டணம் செலுத்துவது வரை அனைத்தையும் வாட்ஸ்அப் மூலம் செய்யலாம்.
இப்போது, இந்த சேவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் டெஸ்டிங் பீரியடில் உள்ளன, சில நாட்களில் இந்த சேவைகள் வாட்ஸ்அப்பில் அனைவருக்கும் கிடைக்கும். கட்டணம் செலுத்துவதை தவிர, ஐசிஐசிஐ (ICICI) வங்கி வாடிக்கையாளர்கள் WhatsApp-ல் ப்ரீபெய்ட் மொபைல்களை ரீசார்ஜ் செய்யவும் முடியும்.
ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வங்கி ஏற்கனவே வாட்ஸ்அப்பில் பல சேவைகளை அளித்து வருகிறது, இந்த புதிய சேவைகளையும் சேர்த்து, வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் மொத்தம் 25 சேவைகளை வழங்குகிறது எனலாம். 6 மாதங்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு WhatsApp மூலம் வங்கி சேவைகளை வழங்கத் தொடங்கியது. WhatsApp மூலம் வங்கி சேவையை வழ்ங்கும் முதல் வங்கி இதுவாகும்.
ஐசிஐசிஐ வங்கியில் WhatsApp பேங்கிங்
1. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் இருந்து 86400 86400 என்ற எண்ணிற்கு 'Hi' என அனுப்பவும். வாட்ஸ்அப்பில் பட்டியலிடப்பட்டுள்ள சேவைகளின் முழுமையான பட்டியலை வங்கி உங்களுக்கு அனுப்பும். எடுத்துக்காட்டாக, வங்கி இருப்பு வரலாற்றை அறிவது முதல் கிரெடிட் கார்டு லிமிட் வரை அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இப்போது நிலையான வைப்புகளும் அதாவது பிக்ஸட் டெபாஸிட்டும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
2. அந்த பட்டியலிலிருந்து நீங்கள் விரும்பும் எந்தவொரு சேவையின் keyword எழுதவும், அல்லது அதன் Option Numberஐ அனுப்பவும்.
வாட்ஸ்அப்பில் FD திறப்பது எப்படி
நீங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் FD திறக்க விரும்பினால், வாட்ஸ்அப்பில், FD அல்லது fixed deposit போன்ற keyword எழுதி அனுப்புங்கள், நீங்கள் எவ்வளவு காலதிற்கான எஃப் டி எடுக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கப்படும். இது தொடர்பான எல்லா தகவல்களையும் வழங்க வேண்டும். எஃப்.டி தொகை ரூ .10,000 முதல் ரூ .1 கோடி வரை இருக்கலாம். ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப வட்டி விகிதத்தையும் அறியலாம். இதில், நீங்கள் முதிர்ச்சியடையும் போது எவ்வளவு பணம் பெறுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப்பில் பில் செலுத்துவது எப்படி
நீங்கள் வாட்ஸ்அப்பில் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்தலாம். அது மிகவும் எளிது. நீங்கள் அதன் keyword எழுதி வாட்ஸ் அப் செய்ய வேண்டும். நீங்கள் எந்த பில்லை செலுத்த விரும்புகிறீர்கள் என்று கேட்கப்படும். நீங்கள் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தால், electricity bill என எழுதுங்கள், பின்னர் மின்சார வாரியம் எண் மற்றும் நுகர்வோர் எண் பற்றிய தகவல்களை வங்கி கேட்கும், நீங்கள் அதனை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும். எவ்வளவு பில் செலுத்த வேண்டும் என்று உங்களிடம் கேட்கப்படும், இந்த தகவலையும் தர வேண்டும். தகவல் உறுதிசெய்யப்பட்ட பிறகு, வாட்ஸ்அப் மூலம் கட்டணம் செலுத்தப்படும்.
இதேபோல், நீங்கள் போஸ்ட்பெய்ட் மொபைல் பில், கேஸ் பில் ஆகியவற்றையும் நிரப்பலாம். ‘Pay bills,’ ‘Electrcitiy,’ ‘Gas’ மற்றும் ‘Mobile postpaid.’ போன்ற சில keyword நீங்கள் WhatsApp சேட்டில் குறீப்பிட வேண்டும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe