LIC in Health Insurance Sector: நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, இப்போது ஹெல்த் இன்சூரன்ஸ் என்னும் மருத்துவ காப்பீட்டு துறையில் காலபதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உடல் நலக் காப்பீட்டு துறையில் உள்ள நிறுவனத்தை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. கூட்டுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உடல்நலக் காப்பீட்டுத் துறையில் நுழையத் தயாராக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்ஐசி தலைவர் கூறிய தகவல்


எல்ஐசி தலைவர் சித்தார்த்த மொகந்தி, இது குறித்து கூறுகையில், கூட்டு உரிமத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் கள அளவிலும் சில பணிகளை செய்துள்ளோம். நாங்கள் உடல்நலக் காப்பீட்டுத் துறையில் (Health Insurance) நுழைவதற்கான எங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறோம். செலவுகள் மற்றும் இணக்கச் சுமையைக் குறைக்க 2024 பிப்ரவரி மாதத்தில் கூட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்த நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மேலும் பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகளையும் எல்ஐசி பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.


காப்பீட்டுச் சட்டத்தில் தேவைப்படும் மாற்றங்கள் 


தற்போது, ​​ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உடல்நலக் காப்பீட்டின் கீழ் நீண்ட காலப் பலன்களை மட்டுமே வழங்க முடியும். மேலும் மருத்துவமனை அல்லது வேறு எந்த வகையிலும் காப்பீடு வழங்க காப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்காக, காப்பீட்டு நிறுவனங்களின் செலவுகள் மற்றும் இணக்கச் சுமையைக் குறைக்க, கூட்டுக் காப்பீட்டு உரிமத்தை அறிமுகப்படுத்த நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


2022-23 ஆம் ஆண்டின் இறுதியில், 2.3 கோடிக்கும் குறைவான சுகாதார காப்பீடுகள் வழங்கப்பட்டன. இவை 55 கோடி மக்களை உள்ளடக்கிய காப்பீடுகள். அரசாங்கம் மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான IRDAI, அதிக அளவிலான மக்களை உடல் நல காப்பீட்டின் கீழ் கொண்டு வர, இன்னும் அதிக அளவில் சுகாதார காப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும் LIC நிறுவனம் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் நுழைவதன் மூலம், இந்த பணி வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஐசி இப்போது ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் நுழைவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.


மேலும் படிக்க | Health Insurance: மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!


லாபத்தில் இயங்கும் எல்ஐசி நிறுவனம்


எல்ஐசியின் நிதி நிலையை பற்றி பேசுகையில், மார்ச் 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.13,762 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.13,427 லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தையில் எல்ஐசி சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. எல்ஐசி பங்கின் விலை கடந்த ஆறு மாதங்களில் 52 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனுடன், எல்ஐசி நாட்டின் முதல் 10 மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. அதன் சந்தை மூலதனம் ரூ.6.51 லட்சம் கோடி என அளவில் உள்ளது.


மேலும் படிக்க | IRCTCயின் சுகாதார காப்பீடு! 10 லட்சம் ரூபாய் காப்பீடுக்கு பிரீமியம் 45 காசு மட்டுமே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ