Interim Budget 2024: பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அரசு இந்தாண்டுடன் அதன் 10 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வரும் பிப். 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளனர். வழக்கமான, முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக இது அறிவிக்கப்பட உள்ளது. இதில் சிலருக்கு முழு பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட்டுக்கும் இருக்கும் வேறுபாடு என்றால் என்ன என்பது தெரிந்திருக்காது. இதுகுறித்து இதில் முழுமையாக காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடைக்கால பட்ஜெட் ஏன்...?


முன்னர் சொன்னது போல் இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், ஆட்சியை நிறைவு செய்யும்போது, இந்த அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவேதான், ஏப்ரல்-மே தேர்தல்களுக்குப் பிறகு புதிய அரசாங்கம் செயல்படும் வரை பண விவகாரங்களை நிர்வகிக்கும் ஒரு குறுகிய பதிப்பான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றனர். ஆனால், அதற்கும் சில விதிகள் உள்ளன.  


இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் சில கடுமையான வரம்புகளையும் நிர்ணயித்துள்ளது. வாக்காளர்களை அதிக கவரும் வகையில், பெரிய மாற்றங்களை அரசாங்கம் செய்வதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. எனவே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் கொள்கைகள் எதையும் அறிவிக்க இயலாது.


மேலும் படிக்க | Budget: 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் ஸ்வீட் நியூஸ்?


இடைக்கால பட்ஜெட்டில் என்ன இருக்கிறது?


இந்த இடைக்கால பட்ஜெட்டில், மத்திய அரசின் கடந்தாண்டு வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படும். புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, வரவிருக்கும் மாதங்களில் அவர்கள் என்ன செலவழிக்க திட்டமிட்டுள்ளனர் என்பதையும் இதில் தெரிவிப்பார்கள். ஆனால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வரிகள் மூலம் அதிக பணம் ஈட்டுவது குறித்து அவர்களால் பேச இயலாது


Vote On Account


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 116வது பிரிவின்படி கணக்கு வாக்கெடுப்பு என்பது (Vote On Account) குறுகிய கால செலவினங்களை ஈடுகட்ட, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்தில் இருந்து அரசாங்கத்திற்கு வழங்கப்படும் முன்கூட்டிய மானியம் என்பதை நினைவில் கொள்ளவும். 


வரிகள், கடன்களுக்கான வட்டி மற்றும் பிற வசூல் மூலம் மத்திய அரசு உருவாக்கும் அனைத்து வருவாயின் கணக்குதான் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியாகும். இந்த மொத்த தொகையில் இருந்து பயன்படுத்தப்படும் தொகை, அதாவது சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசின் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.


மேலும் படிக்க | Budget 2024: வீடு வாங்க தயாரா? ரியல் எஸ்டேட் துறைக்கு காத்திருக்கும் குட் நியூஸ் இதோ


புதிய நிதியாண்டு தொடங்கும் போது, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து எந்தப் பணத்தையும் செலவழிக்க அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படும். கணக்கு வாக்கெடுப்பு (Vote On Account) என்பது அரசாங்கத்தின் செலவினங்களுக்கு பாராளுமன்றத்தின் இடைக்கால ஒப்புதலாகும், ஏனெனில் ஒதுக்கீட்டு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு கால தாமதமாகும் என்பதால். 


சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்...


ஒரு இடைக்கால பட்ஜெட் புதிய அரசாங்கம் பொறுப்பேற்று முழு பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் வரையிலான காலத்திற்கான வருவாய் மற்றும் செலவு விவரங்கள் இரண்டையும் கொண்டுள்ளது. மறுபுறம், கணக்கு வாக்கெடுப்பில் அரசாங்கத்தின் செலவுகள் மட்டுமே அடங்கும்.


இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு முன் விவாதித்து, மாற்றம் செய்து, அதில் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு நேர்மாறாக, கணக்கு வாக்கெடுப்பு ஒரு முறையான நடைமுறை மற்றும் விவாதம் இல்லாமல் மக்களவையில் நிறைவேற்றப்படலாம். அரசாங்கம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வரி முறையை மாற்றியமைக்கலாம், இருப்பினும், கணக்கு வாக்கெடுப்பு மூலம் அதை மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.


மேலும் படிக்க | Budget 2024: வரிசெலுத்துவோருக்கு நல்ல செய்தி.... காத்திருக்கும் வரிச் சலுகைகள், விலக்குகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ