Post Office Time Deposit Scheme: எளிய நடுத்தர மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை தூண்டும் வகையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினர்களுக்கு ஏற்ற வகையில் பல தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிலையான வைப்பு என்ற வகையில், முதலீட்டாளர்கள் வட்டி மூலம் மட்டுமே லட்சங்களை சம்பாதிக்க உதவும் நாங்கள் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம், அதிகம் பேர் தேர்வு செய்யும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று. இந்த ஐந்தாண்டுத் திட்டத்தில், உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, வட்டி மூலம் சிறப்பான வருமானத்தையும் பெறலாம். இதன் காரணமாகவே, இது பிரபலமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை ஈட்ட விரும்பினால் (Investment Tips), போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். பெரும்பாலானோர் இதை தபால் அலுவலக FD என்று அழைக்கிறார்கள்.


வங்கிகளிலும் FD முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் 5 ஆண்டுகளுக்கு FD முதலீடு செய்ய விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சிறந்த வட்டி கிடைக்கும். தற்போது, ​​தபால் அலுவலகத்தின் 5 வருட FDக்கு 7.5% வட்டி கிடைக்கிறது. இது தவிர, 5 வருட FDயில் வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் வரிச் சலுகையும் கிடைக்கும். அஞ்சலக FD முதலீட்டில், ₹1,00,000, ₹2,00,000 மற்றும் ₹3,00,000 என்ற அளவில் FD முதலீடு செய்வதன் மூலம் வட்டி வருமானமாக எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு அறிந்து கொள்ளலாம்.


₹3,00,000 FD முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானம்


தபால் நிலையத்தின் டைம் டெபாஸிட் திட்டத்தில் நீங்கள் ₹3,00,000 முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி விகிதத்தில் வட்டியாக ₹1,34,984 கிடைக்கும். இதில், நீங்கள் முதிர்ச்சியின் போது மொத்தம் ₹4,34,984 பெறுவீர்கள்.


மேலும் படிக்க | PPF: மாதம் ரூ.12,500 முதலீட்டில்... ஒரு கோடியை பெறுவது எப்படி..!!


₹2,00,000 FD முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானம்


தபால் நிலையத்தின் நேர வைப்பு திட்டம் என்னும் டைம் பெபாஸிட் திட்டத்தில் நீங்கள் ₹ 2,00,000 முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி விகிதத்தில் ₹89,990 வட்டி கிடைக்கும். நீங்கள் முதிர்ச்சியின் போது மொத்தம் வட்டியும் அசலும் சேர்த்து ₹2,89,990 பெறுவீர்கள்.


₹1,00,000 FD முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானம்


₹1,00,000 என்பது பெரும்பாலானோர் எஃப்டியில் முதலீடு செய்யும் தொகை. நீங்களும் அதே தொகையை முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி விகிதத்தில் உங்களுக்கு ₹44,995 வட்டி கிடைக்கும். இதில், முதிர்ச்சியின் போது மொத்தம் ₹1,44,995 கிடைக்கும்.


கணக்கை நீட்டிப்பதற்கான வழிமுறைகள்


நீங்கள் விரும்பினால், உங்கள் அஞ்சலக FD கணக்கை நீட்டித்து, அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை மேலும் அதிகரிக்கலாம். தபால் அலுவலகத்தின் 1 வருட FD கணக்கை, முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் நீட்டிக்கலாம். 2 வருட FD முதிர்வு காலத்திலிருந்து 12 மாதங்களுக்குள் மற்றும் 3 மற்றும் 5 வருட FD முதிர்வு காலத்திலிருந்து 18 மாதங்களுக்குள் நீட்டிக்கப்படலாம். இது தவிர, கணக்கைத் திறக்கும் போதே, ​​முதிர்வுக்குப் பிறகு கணக்கை நீட்டிக்கக் கோரலாம். முதிர்வு தேதியில் தொடர்புடைய எஃப்டி கணக்கிற்குப் பொருந்தக்கூடிய வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட காலத்துக்கும் பொருந்தும்.


மேலும் படிக்க | மாதம் இரண்டரை லட்சம் ஓய்வூதியம் பெற சூப்பர் ஐடியா! புத்திசாலித்தனமான முதலீடு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ