Petrol Prices Latest Update: அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சாமானிய மக்களை பாதித்துள்ளன என்பதை மறுக்க இயலாது. தற்போது, ​​நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு நிலவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.


ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum), இந்தியன் ஆயில்(Indian Oil) , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை  தினசரி நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.


ALSO READ | விரைவில் பெட்ரோல் 4 ரூபாயும், டீசல் 5 ரூபாயும் குறைய வாய்ப்பு -முழு விவரம்


இன்றும், தொடர்ந்து எட்டாவது நாளாக, அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்க வில்லை. கடந்த வாரம் சனிக்கிழமை, டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, ஆனால் பெட்ரோல் விலை 29 முதல் 30 பைசா வரை அதிகரித்தது. அதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கவில்லை.



இன்று டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.101.84 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.89.87 ஆகவும் உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.107.83, டீசல் லிட்டருக்கு ரூ.97.45 என்ற அளவிலும் உள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 102.08 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93.02 ரூபாயாகம் உள்ளது. சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.49 என்ற அளவிலும், டீசல் ரூ.94.39 என்ற அளவிலும் உள்ளது.


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது  என்பதோடு, பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR