IRCTC Tour Package for Andaman and Nicobar: புத்தாண்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா? குறைவான பட்ஜெட் செலவில், நீங்கள் நாட்டிற்குள் பயணம் செய்ய திட்டமிட்டால், நீங்கள் அந்தமான் நிக்கோபார் செல்லலாம். மிக அழகான கடற்கரைகளை கொண்டுள்ள அந்தமான் - நிகோபார் தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC) அந்தமான் மற்றும் நிக்கோபருக்கு டூர் பேக்கேஜ்களை வழங்குகிறது. புத்தாண்டில் அந்தமான் மற்றும் நிக்கோபாருக்குச் செல்வதற்கான ஏற்ற பருவம் இது. கடற்கரையில் உலாவும் போது நீர் சாகசத்தை அனுபவிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IRCTC அந்தமான் டூர் பேக்கேஜ்


IRCTC உங்களுக்கு 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கான டூர் பேக்கேஜை வழங்குகிறது.  இந்திய ரயில்வேயின் (Indian Railways) ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, அந்தமான் மற்றும் நிக்கோபருக்கான இந்த டூர் பேக்கேஜ் ரூ.23900 என்ற அளவில் தொடங்குகிறது. இந்த டூர் பேக்கேஜில் ஹோட்டல் மற்றும் உள்ளூர் போக்குவரத்து, உணவு ஆகியவை அடங்கும். இதில் விமானச் செலவுகள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது. விமான பயணத்தை நீங்களே புக் செய்து ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த டூர் பேக்கேஜை எடுக்கலாம். இதற்கு நிலையான கால நேரம், தேதி எதுவும் இல்லை.


மேலும் படிக்க | Indian Railways: ஒரே டிக்கெட்டில் 56 நாட்களுக்கு இந்தியா முழுவதும் சுற்றலாம்


IRCTC டூர் பேக்கேஜ் ரூ.23,900 என்ற அளவில் தொடங்குகிறது


IRCTC வழங்கும் இந்த டூர் பேக்கேஜில் ஹோட்டல் மற்றும் உள்ளூர் போக்குவரத்து, உணவு அதாவது 5 நாட்களுக்கு காலை உணவு ஆகியவை அடங்கும். இந்த டூர் பேக்கேஜ் ரூ.23,900 முதல் தொடங்குகிறது. ஒருவருக்கு டூர் பேக்கேஜ் எடுத்தால் ரூ.52,740 செலுத்த வேண்டும். இருவர் பயணம் செய்தால் ரூ.30,775 செலுத்த வேண்டும். மூன்று பேர் டூர் பேக்கேஜ் எடுத்தால், 27,450 ரூபாய் செலுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் இதில் எல்டிசியின் பலனைப் பெறலாம். IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனைத்து தகவல்களையும் பெறுவீர்கள். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com என்ற தளத்தில் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். இது தவிர உங்கள் உள்ளூர் IRCTC அலுவலகத்திற்குச் செல்லலாம்.


அந்தமான் - நிகோபர் தீவுகள் 


இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் - நிகோபர் தீவுகள் சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்றது. குட்டி குட்டி தீவுகளாக இயற்கை எழில் கொஞ்சும் அந்தமானின் தலைநகராக போர்ட் பிளேயர் விளங்குகிறது. அந்தமான நிக்கோபர் தீவுகளில் உள்ள பெரும்பாலான தீவுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளன. சிறியதும் பெரியதுமாய் அந்தமான் - நிகோபாரில் மொத்தம் 572 தீவுகள் உள்ளன. இதில், 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். சில தீவுகள் நீா்நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுகள், சிற்றோடை சுற்றுலா உள்ளிட்டவைக்கு உகந்தவையாக இருக்கின்றன.


மேலும் படிக்க | Indian Railways: விரைவில் வருகிறது வந்தே பாரத் சாதாரண்... குறைந்த கட்டண ரயில் சேவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ