இந்த 5 கிரெடிட் கார்டு விவரங்களை தெரிஞ்சுக்கோங்க! அபராதங்கள் வராமல் தடுக்கலாம்!
கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் உடன்பட வேண்டும். உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இதற்கான ஒப்பந்தம் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
கிரெடிட் கார்டுகள் நமக்கு உதவிகரமானதாக இருக்கும் என்றாலும் அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் நன்மை தீமை கிடைப்பதும். கிரெடிட் கார்டு வரம்பை மீறி நீங்கள் செலவு செய்தாலோ அல்லது சரியான தேதியில் தவணை தொகையை செலுத்தாமல் இருந்தாலோ நீங்கள் பலவித கூடுதல் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், நவீன வாழ்க்கை முறையின் தேவைக்காகவும் பலரும் கிரெடிட் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நீங்கள் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் உடன்பட வேண்டும். உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இதற்கான ஒப்பந்தம் மின்னஞ்சலில் அனுப்பப்படும். நீங்கள் செலுத்தக்கூடிய பல்வேறு கட்டணங்களை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது ஏதேனும் அபராதங்கள் மற்றும் கூடுதலாக கட்டணங்கள் செலுத்துவதை தவிர்க்காமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
மேலும் படிக்க | Budget 2023-24 Live Updates: பட்ஜெட் உரை நிறைவு... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
வருடாந்திர கட்டணம்:
வருடாந்திர கட்டணம் வருடத்திற்கு ஒரு முறை மதிப்பிடப்படுகிறது மற்றும் கார்டைப் பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும். வங்கிகள் எப்போதாவது கிரெடிட் கார்டுகளை இலவசமாக வழங்கும், அந்த கார்டுக்கு ஒருபோதும் வருடாந்திர அல்லது ஜாயினிங் கட்டணம் இருக்காது. வருடாந்திரக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க, வருடாந்திர கட்டண அட்டையைத் தேர்வு செய்யவேண்டும்.
வட்டி விகிதம்:
ஒவ்வொரு பில்லிங் சுழற்சியிலும் உங்கள் கிரெடிட் கார்டில் உள்ள முழுத் தொகையையும் நீங்கள் செலுத்தவில்லை என்றால் அதற்கு வட்டி விதிக்கப்படும். நிலுவை தொகை இருந்தால் உங்களுக்கு வங்கி கூடுதல் கட்டணங்களை விதிக்கும். உங்கள் செலவைக் குறைக்க வேண்டும் அல்லது 0% ஏபிஆர் உடன் கிரெடிட் கார்டைப் பார்க்கவும், உங்கள் பில்லை முழுவதுமாகச் செலுத்த முடியாவிட்டால் 21 மாதங்கள் வரை வட்டி வசூலிக்கப்படாது.
அதிக வரம்புக் கட்டணம்:
கிரெடிட் கார்டின் வகையைப் பொறுத்து, நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறலாம் அல்லது மீறாமல் இருக்கலாம். இதை இலவசமாக செய்ய வங்கிகள் அனுமதிக்கவில்லை, அதற்கு பதிலாக அட்டை வழங்குபவர் உங்களிடம் ஒரு பெரிய தொகையை வசூலிப்பார். பெரும்பாலான வங்கிகள் குறைந்தபட்சம் ரூ. 500 வசூலிக்கின்றது.
தாமதமாக செலுத்தும் கட்டணம்:
நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாவிட்டால், வங்கிகள் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்துவதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகின்றன. அதுவும் உங்களால் முடியாவிட்டால், தாமதமாகப் பணம் செலுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். உங்கள் ஸ்டேட்மென்ட் பேலன்ஸ் அடிப்படையில் இது வசூலிக்கப்படும்.
மேலும் படிக்க | Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ