நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், குறைந்த செலவில் பெரும் லாபம் தரும் தொழிலை பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. இன்று நாங்கள் உங்களுக்கு இது போன்ற ஐந்து வணிக யோசனைகள் குறித்த தகவல்களை தருகிறோம். இதன் மூலம் நீங்கள் பண்டிகைக் காலத்தில் பெரும் வருமானம் ஈட்டலாம் (Festive Season Business). பகுதி நேரமாக இந்தத் தொழிலைத் தொடரலாம் என்பது தான் சிறப்பு. தீபாவளி, நவராத்திரி என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பண்டிகையிலும் பூஜை மற்றும் பண்டிகை தொடர்பான பொருட்களின் தேவை மிகவும் அதிகரிக்கிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு மாதங்களில் பெரிய லாபம் சம்பாதிப்பீர்கள்!


எந்தவொரு வணிகத்தையும் நடத்துவதற்கு, சந்தையில் அந்த தயாரிப்புக்கான தேவை மிகவும் முக்கியமானது. இந்தியா திருவிழாக்கள் நிறைந்த நாடு, வருடத்தின் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் ஏதாவது ஒரு பண்டிகை இருக்கும். இருப்பினும், வரவிருக்கும் இரண்டு மாதங்களைப் பற்றி பேசினால், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகைகள் வருகின்றன. இந்த காலகட்டத்தில், பூஜைக்கு தேவையான பொருட்கள், மின் விளக்குகள், அலங்கார பொருட்கள் மற்றும் மண் விளக்குகள் என பலவற்றின் தேவை தொடர்ந்து அதிகரித்து . அதாவது, இந்த தயாரிப்புகளின் வணிகம் (Business Idea) இரண்டு மாதங்களில் உங்களுக்கு பம்பர் லாபத்தைக் கொண்டுவரும்.


முதல் தொழில் - பூஜை பொருள்


மேலே குறிப்பிட்டுள்ளபடி, நவராத்திரி தொடங்க உள்ளது மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் உச்சத்தில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த தொழிலை தொடங்கினால், நீங்கள் லாபம் பெறலாம். நவராத்திரியின் போது மட்டுமின்றி பூஜை பொருட்களுக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உண்மையில், இந்தியாவில், பூஜைகள் என்பது பொதுவாக அனைத்து வீடுகளிலும் செய்யப்படுகிறது மற்றும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள், குங்குமம், விபூதி, தூபம், தீபம், ஊதுபத்தி, கற்பூரம் மற்றும் பிற பொருட்களுக்கு தேவை உள்ளது. குறைந்த செலவில் இந்தத் தொழிலைத் தொடங்க, நீங்கள் ரூ. 5000-7000 முதலீடு செய்ய வேண்டும், இந்த முதலீட்டின் மூலம் நீங்கள் தினசரி ரூ. 2,000 வரை சம்பாதிக்கலாம். நல்ல தரமான இயற்கை தயாரிப்புகளுக்கு என்றுமே வரவேற்பு அதிகம் இருக்கும்.


இரண்டாவது வணிகம்- மின் விளக்குகள்


தீபாவளி பண்டிகையையொட்டி, வீடு, கடை அல்லது அரசு கட்டிடம் என அனைத்தும் வண்ணமயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கும் . இந்த அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் மின் விளக்குகளும் மிகவும் ஸ்மார்ட்டாக உள்ளன. சந்தையில் சீன விளக்குகளுக்கு வலுவான தேவை உள்ளது. அவை மலிவான விலையில் விற்கப்படுகின்றன. ஆனால் இந்த அலங்கார விளக்குகளின் வியாபாரத்தை சிறிய அளவில் தொடங்கலாம். உங்கள் பட்ஜெட் திட்டத்தின் படி, நீங்கள் மொத்த சந்தையில் ரெடிமேட் விளக்குகளை வாங்கி உங்கள் அருகிலுள்ள சந்தையில் சில்லறை விற்பனையில் விற்கலாம். இதில் சிறந்த மார்ஜின் கிடைக்கிறது. உங்கள் தயாரிப்புகளை ஆன்லைன் தளங்கள் மூலமாகவும் விற்கலாம்.


மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!


மூன்றாவது வணிகம் - அலங்கார பொருட்கள்


தீபாவளியை விளக்குகளின் திருவிழா என்று அழைப்பர். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், மக்கள் தங்கள் வீடுகளையும் நிறுவனங்களையும் வண்ணமயமான சரவிளக்குகள் மற்றும் விளக்குகளால் பிரகாசமாக்குவதோடு மட்டுமல்லாமல், பல வகையான அலங்கார பொருட்களால் அலங்கரிக்கின்றனர். இந்த அலங்காரப் பொருட்களை உங்களது படைப்பாற்றல் மூலம் நீங்களே தயார் செய்யலாம் அல்லது மொத்த சந்தையில் இருந்து வாங்கி சில்லறை விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். தீபாவளி வரை இந்த அலங்காரப் பொருட்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. பண்டிகை காலம் மட்டுமல்லாது, பிற நாட்களிலும் மக்கள் தங்கள் வீட்டை அலங்கரிக்க மின் விளக்குகளை வாங்க விரும்புகிறார்கள்


நான்காவது வியாபாரம்- மண் விளக்குகள்


ஒருபுறம், எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் தீபாவளியின் போதும் கார்த்திகையின் போதும் மின் விளக்குகள் உற்பத்தி அதிகரித்தாலும், மறுபுறம், பழைய நம்பிக்கைகளின்படி, தீபத் திருநாளில் மண் விளக்குகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அத்தகைய சூழ்நிலையில், இந்த விளக்குகளின் வியாபாரத்தை நீங்கள் தொடங்கலாம். இந்த விளக்குகளை குயவர்கள் மூலம் நேரிடையாக கொள்முதல் செய்து, வித்தியாசமான முறையில் வடிவமைக்கலாம். இப்போதெல்லாம், மற்ற பொருட்களைப் போலவே, டிசைனர் விளக்குகளுக்கும் அதிக தேவை உள்ளது. விதம் விதமான வண்ணங்கள் மற்றும் வேலைப்பாடுகளுடன், வண்ண விளக்குகள் மற்றும் சில்லறை சந்தைகளில் இருந்து ஆன்லைன் தளங்களுக்கு விற்கப்படுகிறது. சிறிய முதலீட்டில் வாங்கி சொந்தமாக தொழில் தொடங்கி பெரும் பணம் சம்பாதிக்கக்கூடிய இந்த விளக்குகளை தயாரிக்கும் இயந்திரங்களும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.


ஐந்தாவது தொழில் - கொலு பொம்மைகள் மற்றும் அலங்கார பொருட்கள்


பண்டிகை காலங்களில், நவராத்திரி அல்லது தீபாவளி பண்டிகைகளில், விளக்குகள் மற்றும் அலங்கார பொருட்கள், மிக முக்கியமாக கொலு பொம்மைகள் வியாபாரமும் முழு வீச்சில் இயங்கும். நவராத்திரி காலத்தில் கொலு பொம்மைகள் வாங்கும் பிஸினஸ் அதிகபட்ச அளவில் இருக்கும் உள்ளது. மண் அல்லது காகித கூழ்கள் மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட கொலு பொம்மைகள் விற்று சம்பாதிக்கலாம். இது தவிர, தீபாவளியின் போதும் கார்த்திகையின் அகல் விளக்குகள் மற்றும் அலங்கார பொர்ட்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக சம்பாதிக்கலாம். 


மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ