பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு உண்டு. தொடர்ச்சியாக முதலீடு செய்துவந்தால் உங்களது இந்த கனவைநீங்கள் நிறைவேற்றலாம். சேமித்து வந்தாலே போதும் உங்களது ஓய்வுக் காலத்தில் மிகப் பெரிய தொகையை உங்களால் ஈட்டிவிட முடியும். அதற்கான பல்வேறு திட்டங்கள் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படிபட்ட திட்டத்தை பற்றி நாம் இங்கே காண உள்ளோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெக்கரிங் டெபாசிட் (Recurring Deposit) திட்டத்தில் சேமிக்க உங்களுக்கு மிகப் பெரிய தொகை தேவையில்லை. தொடர்ச்சியாக சேமித்துவந்தாலே லட்சங்களிலும், கோடிகளிலும் சம்பாதிக்கலாம். வெறும் ஐந்து ஆண்டுகளில் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் கீழ் நீங்கள் லட்சாதிபதியாகலாம். மாதம் ரூ.1,450 என்ற அளவில் சேமித்தால் ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கையில் கிடைக்கும். 8 சதவீத வட்டி லாபத்தில் இந்த இலக்கை நீங்கள் அடைய முடியும். தபால் நிலையத்திலும் (Post Office) நீங்கள் இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.


ALSO READ | Post Office RD: போஸ்ட் ஆபிஸில் உங்களுக்கு RD கணக்கு இருக்கா? அப்போ கொண்டாட்டம் தான்


தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் உங்களுக்கு 5.8 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது. இத்திட்டத்தில் நீங்கள் 12 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் உங்களது முதலீட்டுப் பணம் இரு மடங்கு ஆகும். அதேபோல் ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.5,500 டெபாசிட் செய்து வந்தால் வெறும் 30 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகிவிட முடியும்.


தபால் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ள திட்டங்களில் தற்போதைய வட்டி நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்:
ரெக்கரிங் டெபாசிட் - 5.8%


மாதாந்திர வருமானத் திட்டம் - 6.6%
டைம் டெபாசிட் (ஒரு வருடம்) - 5.5%
டைம் டெபாசிட் (2 வருடம்) - 5.5%
டைம் டெபாசிட் (3 வருடம்) - 5.5%
டைம் டெபாசிட் (4 வருடம்) - 6.7%
கிசான் விகாஸ் பத்ரா - 6.9%
பிபிஎஃப் - 7.1%
சுகன்யா சம்ரிதி யோஜனா - 7.6%
தேசிய சேமிப்புச் சான்றிதழ் - 6.8%
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் - 7.4%


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR