Last Date For Advance Tax Payment: வரி செலுத்துவோருக்கு வருமான வரி தொடர்பான ஒரு முக்கிய செய்தி உள்ளது. அட்வான்ஸ் வரி செலுத்த இன்றே கடைசி தேதி ஆகும். வரி செலுத்துவோர் (Taxpayers) அட்வான்ஸ் டேக்ஸ் கணக்கீட்டை மிகவும் கவனமாக செய்ய வேண்டியது அவசியம். இது பற்றிய சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்வான்ஸ் டேக்ஸ் என்றால் என்ன? (What is Advance Tax)


வரித்தொகையை ஒட்டுமொத்தமாக கட்டுவதற்கு பதிலாக குறிப்பிட்ட தேதிகளின்படி தவணைகளில் செலுத்தும் வரித் தொகையே அட்வான்ஸ் டேக்ஸ் என்று கூறப்படுகின்றது. இதற்கான தேதிகள் முன்னரே தீர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. அதன் படி குறிப்பிட்ட சதவிகித வரி செலுத்தப்படுகின்றது. 


அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதற்கான காலக்கெடு விவரங்கள் இதோ: 


- ஜூன் 15: 15% அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த வெண்டும்.


- செப்டம்பர் 15: ஏற்கனவே செலுத்திய தொகைக்குக் குறைவாக, அட்வான்ஸ் டேக்ஸில் 45% செலுத்த வேண்டும். 


- டிசம்பர் 15: ஏற்கனவே செலுத்திய தொகைக்குக் குறைவாக, அட்வான்ஸ் டேக்ஸில் 75% செலுத்த வேண்டும்.


- மார்ச் 15: ஏற்கனவே செலுத்திய தொகைக்குக் குறைவாக, அட்வான்ஸ் டேக்சின் மீதமுல்ள தொகையை கட்ட வேண்டும். 


யார் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த வேண்டும்? (Who Should Pay Advance Tax?)


TDS மற்றும் TCS ஆகியவற்றைக் கழித்த பிறகு வரிப் பொறுப்பு ரூ. 10,000க்கு மேல் இருக்கும் வரி செலுத்துவோர் நான்கு தவணைகளில் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த வேண்டும். ஏதேனும் தவணையில் குறை இருந்தால் அடுத்த தவணையில் ஈடுகட்ட வேண்டும். ஆகையால், நடப்பு ஆண்டிற்கான தவணைத் தொகையை நீங்கள் செலுத்தவில்லை என்றால், மார்ச் 15 ஆம் தேதி, அதாவது இன்றைக்குள் அட்வான்ஸ் டேக்ஸ் தொகையை செலுத்தலாம்.


அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்தத் தவறினால் என்ன நடக்கும்?


அட்வான்ஸ் டேக்ஸ் தொகையை செலுத்தப்படாவிட்டால், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 234B மற்றும் 234C இன் படி வட்டி கட்டணம் விதிக்கப்படும். அபராதத்தைத் தவிர்க்க, உடனடியாக அட்வான்ஸ் டேக்ஸ் தொகையை செலுத்துவது அவசியம்.


மேலும் படிக்க | அகவிலைப்படியுடன் அதிகரிக்கும் பிற அலவன்சுகள்: பம்பர் ஊதிய ஏற்றம், ஊழியர்கள் ஹேப்பி


அட்வான்ஸ் டேக்ஸ்: ஆன்லைனில் இதை செலுத்துவது எப்படி? (How To Pay Advance Tax Online)


- வருமான வரி இணையதளத்திற்குச் செல்லவும்.


- 'E-Pay Tax' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


- உங்கள் PAN மற்றும் பாஸ்வர்டை உள்ளிடவும்.


- "Advance Tax" என்பதைக் கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும்.


- "Make Payment Now" பொத்தானைக் கிளிக் செய்து கட்டணத்தை செலுத்தி முடிக்கவும்.


- பணம் செலுத்திய பிறகு, உங்கள் கட்டணத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ரசீதைப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | Paytm Fastag மாற்ற கடைசி வாய்ப்பு! இன்றே கடைசி நாள்.... இல்லையென்றால் 2 மடங்கு கட்டணம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ