கடந்தாண்டு 17,545 கோடி-இந்த ஆண்டு தெருக்காேடி! பைஜு ரவீந்திரன் சொத்துக்களை இழந்தது எப்படி?
Latest News Byju Raveendran Net Worth : பைஜு ரவீந்திரனின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு 17, 545 கோடியாக இருந்த நிலையில், தற்போது அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக மாறியுள்ளது. இது நிகழ்ந்தது எப்படி?
Latest News Byju Raveendran Net Worth : சமீபத்தில் ஃபோர்ப்ஸ் நிறுவனம், உலக பணக்காரர்களின் லிஸ்டை வெளியிட்டிருந்தது. இதில், இந்தியாவை சேர்ந்த பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், பைஜு ரவீந்திரனின் சொத்துகள், தற்போது பூஜ்ஜியமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கேட்டதில் இருந்து மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
சர்ச்சையில் சிக்கிய பைஜு நிறுவனம்:
இந்தியாவின் ஆன்லைன் தளமான பைஜுவின் இணை நிறுவனராக இருப்பவர், ரவீந்திரன். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், 2007ஆம் ஆண்டில் பைஜு தளத்தை உருவாக்கினார். பள்ளி-கல்லூரிகள் என கல்வி நிலையங்களில் பயிலாமல், சுயமாக படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டதுதான், பைஜு. இந்த நிறுவனம், கொரோனா காலத்தில் பலருக்கு கற்பிக்கும் கருவியாக இருந்ததால், இதன் வளர்ச்சியும் அசுர வேகத்தில் இருந்தது.
பைஜு நிறுவனம் வளர்ச்சியை சந்தித்தாலும், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்த வண்ணம் இருந்தது. அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய விவகாரம், முதலீட்டாளர்கள் பிரச்சனை, ஊழியர்களின் வேலை இழப்பு என அடுக்கடுக்காக இந்த நிறுவனம் சம்பவம் செய்தது.
கடந்த ஆண்டும்..இந்த ஆண்டும்..
பைஜு’ஸ் நிறுவன தலைவர் ரவீந்திரன், கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் ரூ.17,545 கோடி சொத்துக்களுடன் இருந்தார். ஆனால், இந்த ஆண்டு வெளியான பட்டியலில், அவரது சொத்து பூஜ்ஜியமாக இருப்பதால் ரவீந்திரன் பெயர் இடம் பெறவில்லை என ஃபோர்ப்ஸ் தெரிவித்தது.
ஏன் இந்த வீழ்ச்சி? காரணம் என்ன?
2011ஆம் ஆண்டில், பைஜு ரவீந்திரனும் அவரது மனைவி திவ்யாவும் சேர்ந்து ‘திங்க் அண்ட் லேர்ன்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். இதற்கான தலைமையம், பெங்களூருவில் உள்ளது. பைஜு போலவே, இதிலும் மாணவர்களுக்கு இணையவழி கல்வி கற்பிக்கப்பட்டது. பைஜு தளத்தில் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமன்றி, உயர்கல்வி பயிற்சிகளும் NEET, JEE, CAT உள்ளிட்ட தேர்வுகளுக்குமான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த தளத்தை, 9 லட்சம் பேர் பணம் செலுத்தி பயன்படுத்தி வந்தனர். நகரங்கள் மட்டுமல்ல, கிராமங்களில் இருப்பவர்கள் கூட இதன் மூலம் கல்வி பயில ஆரம்பித்தனர். கொரோனா காலத்தில் பலர் இந்த செயலியை உபயோகிக்க ஆரம்பித்ததால், 2022ஆம் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு, 1.82 லட்சம் கோடியாக மாறியது.
கொரோனாவிற்கு பிறகு இந்த நிறுவனத்திற்கு வருமானம் குறைய ஆரம்பித்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் பலரை வேலையை விட்டு தூக்கினர். அது மட்டுமின்றி, இந்த நிறுவனத்தி நிதி நிர்வாகம் மற்றும் சந்தைப்படுத்தும் உத்தி (Marketing Strategy) ஆகியவை மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பைஜு நிறுவனம் எந்த அளவிற்கு வேகமாக உயர்ந்ததோ, அதை விட வேகமாக சரிய தொடங்கியது.
கடன் சுமையும் அதிகமானதால், 2022ஆம் ஆண்டு நிதியாண்டில் பைஜு நிறுவனத்திகு ரூ.8,245 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதனால், பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தாமதமாகும் நிலை ஏற்பட்டது.
மேலும் படிக்க | இப்போ இதுதான் ட்ரெண்ட்! ‘இந்த’ தொழில் செய்தால் கூடிய விரைவில் லட்சாதிபதி ஆகலாம்..
செயல் அதிகாரி பதவியில் இருந்து நீக்க முடிவு..
பைஜு நிறுவனத்தில் 25 சதவிகிதத்திற்கும் மேல் பங்குகளை, சில நிறுவனங்கள் வைத்துள்ளன. புரோசஸ் என்வி, ஜென்ரல் அட்லாண்டிக், சோபினா எஸ் ஏ, பீக் எக்ஸ்வி உள்ளிட்ட நிறுவனங்கள் பிப்ரவரி மாதம் சிறப்பு பொதுக்குழுவை கூட்டி, பைஜூ’ஸ் ரவீந்திரனை தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வாக்களித்து, அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த முடிவுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தையும் நாடினார்.
அமலாக்கத்துறையினர் சோதனை:
பைஜூஸ் நிறுவனம் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, பைஜு ரவீந்திரனின் வீடு மற்றும் நிறுவனத்துக்கு தொடர்புடைய பகுதிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து, 2011-2023ஆம் ஆண்டு வரை, இந்த நிறுவனம் ரூ.28 ஆயிரம் கோடிக்கும் மேல் அந்நிய முதலீடுகளை பெற்றிருப்பது தெரியவந்தது. அது மட்டுமன்றி, மேற்குறிப்பிட்ட காலகட்டத்திலேயே 9,754 கோடி வரை அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் அனுப்பியுள்ளது தெரிய வந்தது.
பைஜுஸ் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களை குறிப்பிட்ட நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டினர். அமெரிக்க முதலீட்டாளர்கள், பைஜு நிறுவனம், தங்களிடம் இருந்து பல்வேறு கணக்குகளை மறைத்ததாக கூறி குற்றம் சாட்டினர். இப்படி அவப்பெயர் வந்து, சொத்துகளையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது பைஜு நிறுவனம். இதனால்தான் தற்போது பைஜு ரவீந்தரனின் சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ