உலக பணக்காரர்கள் பட்டியல் 2024: அம்புட்டு சொத்து வைத்திருக்கும் அம்பானிக்கு எந்த இடம்?

World's Billionaires List 2024 : உலக பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. இதில் 25 இந்தியர்களின் பெயர்கள் இருக்கிறதாம். அம்பானிக்கு என்ன இடம் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Apr 4, 2024, 05:31 PM IST
  • உலக பணக்காரர்கள் பட்டியல் 2024
  • அம்பானிக்கு எந்த இடம்?
  • புதிதாக 25 பணக்காரர்களின் பட்டியல்!
உலக பணக்காரர்கள் பட்டியல் 2024: அம்புட்டு சொத்து வைத்திருக்கும் அம்பானிக்கு எந்த இடம்?  title=

World's Billionaires List 2024 : வருடா வருடம் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிடும் ஃபோர்ப்ஸ் நாளிதழ், இந்த வருடத்திற்கான கோடீஸ்வரர்களின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. 

உலக பணக்காரர்களின் பட்டியல் 2024:

இந்த ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பட்டியல், நேற்று (ஏப்ரல் 3) ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டது. இந்த பட்டியலில் இவ்வருடம் மொத்தம் 200 இந்தியர்கள் இடம் பெற்றிருகின்றனராம். கடந்த வருடம் வெளியிடப்பட்டிருந்த உலக பணக்காரர்களின் பட்டியலில் மொத்தம் 169 இந்தியர்கள் இருந்தனராம். இந்த எண்ணிக்கையானது இந்த வருடம் உயர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த வருடத்திற்கான உலக பணக்காரர்களின் பட்டியலில் மொத்தம் 25 இந்தியர்கள் புதிதாக இணைந்திருக்கின்றனராம். 

பைஜு ரவீந்திரன்:

பைஜு நிறுவனத்தின் தலைவர் ரவீந்திரனின் நிகர சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு 17 கோடிய 545 கோடியாக இருந்தது. ஆனால் இன்றோ, இவரது சொத்து மதிப்பு பூஜ்யமாக இருக்கிறது. இதனால் ஃபோர்ப்ஸ் நாளிதழின் பணக்காரர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. 

முதல் இடத்தில் யார்? 

உலக பணக்காரர்களின் லிஸ்டில், முதல் இடத்தில் இருப்பவர் பெர்னார்ட் அர்னால்ட். இவருக்கு தற்போது 75 வயதாகிறது. ஃபிரான்ஸ் நாட்டை சேர்ன்ஹ்ட இவர், Louis Vuitton, Sephora உள்ளிட்ட பல்வேறு ஃபேஷன் மற்றும் பிராண்டுகளின் உரிமையாளர் ஆவார். இவரும் இவரது குடும்பத்தினரும் இணைந்துதான் அவர்களது பிராண்டுகளை நடத்தி வருகின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு மொத்தம், அமெரிக்க டாலர் மதிப்பு படி, 233 பில்லியனாக இருக்கிறது. இரண்டாவதாக டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க், மூன்றாவதாக அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பேசோஸ், நான்காவதாக பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். 

அம்பானிக்கு எந்த இடம்? 

ஆசிய அளவில் முதல் இடம் பிடித்த பணக்காரராக இருக்கிறார், முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான இவருக்கு அமெரிக்க டாலர் மதிப்பு படி மொத்தம் 116 பில்லியன் சொத்து மதிப்பு இருக்கிறதாம். இந்திய ரூபாய் படி, மொத்தம் இவருக்கு 8.7 லட்சம் கோடி சொத்து மதிப்பாம். 66 வயதாகும் இவர், ஃபோர்ப்ஸ் நாளிதழின் உலக பணக்காரர்களின் லிஸ்டில் 9வது இடத்தில் இருக்கிறார். 

அதானிக்கு எந்த இடம்?

அம்பானிக்கு அடுத்ததாக உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இந்தியர், கௌதம் அதானி. அதானி குழுமத்தின் தலைவரான இவர், இந்த பட்டியலில் 17வது இடத்தில் இருக்கிறார். 61 வயதாகும் இவரது சொத்து மதிப்பு, மொத்தம் அமெரிக்க டாலர் மதிப்பு படி 84 பில்லியனாக இருக்கிறது. 

மேலும் படிக்க | ஒருவருக்கு Cheque கொடுக்கும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல்:

1.முகேஷ் அம்பானி-ரூ.8.7 லட்சம் கோடி சொத்து
2.கௌதம் அதானி-ரூ.6. 3 லட்சம் கோடி சொத்து மதிப்பு
3.ஷிவ் நாடார் (HCL நிறுவன தலைவர்)-ரூ 2.7 லட்சம் கோடி சொத்து
4.சாவித்ரி ஜிண்டால் - சொத்து மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடி
5.திலிப் ஷாங்க்வி-சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர்- சொத்து மதிப்பு- ரூ.2 லட்சம் கோடி
6.சைரஸ் பூனாவாலா-சைரஸ் பூனாவாலா நிறுவன தலைவர்-சொத்து மதிப்பு-ரூ.1.6 லட்சம் கோடி
7.குஷல் பால் சிங்-இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்-சொத்து மதிப்பு-ரூ.1.56 லட்சம் கோடி
8.குமார் பிர்லா (ஆதித்யா பிர்லா நிறுவன தலைவர்)-சொத்து மதிப்பு, ரூ.1.4 லட்சம் கோடி
8.ராதாகிஷன் தாமினி-சொத்து மதிப்பு-ரூ.1.3 லட்சம் கோடி
9.லக்‌ஷ்மி மிட்டல்-ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் செயல் தலைவர்-சொத்து மதிப்பு சுமார் 1.2 லட்சம் கோடி

லிஸ்டில் புதிதாக இணைந்த 25 இந்தியர்கள்:

1.ரேணுகா ஜக்தியானி
2.கபீல் முல்சந்தினி
3.அஜய் ஜெய்சிங்கனி
4.ரமேஷ் ஜெய்சங்கனி
5.ஒங்கார் கன்வர்
6.அனில் குப்தா
7.ரமேஷ் குன்ஹிகண்ணன்
8.விஜய் அகர்வால்
9.கிரிதாரி ஜெய்சிங்கனி
10.இர்பான் ரசாக்
11.நோமன் ரசாக்
12.ரெஸ்வான் ரசாக்
13.நரேஷ் ட்ரேன்
14.ஷிவ்ரதன் அகர்வால்
15.அல்பனா டாங்கி
16.நரேஷ் ஜெயின்
17.சசிசேகர் பண்டிட்
18.சசிபம்மா ஜாதிதி
19.மோதிலால் ஓஸ்வால்
20.கல்பனா பரேக்
21.லலித் கைதான்
22.நிகில் மெர்ச்சண்ட்
23.பிரதீப் ரத்தோட்
24.மஹாவீர் பிரசாத் தபரியா
25.ஷிவ்தரன் தபரியா

மேலும் படிக்க | PAN Aadhaar Link: ‘இவர்கள்’ பான் - ஆதார் அட்டை இணைக்க தேவையில்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News