₹17,545 கோடியிலிருந்து... பூஜ்ஜியமாக சரிந்த பைஜூஸ் ரவீந்திரனின் சொத்து மதிப்பு!

Net Worth of Byju's  Raveendran: நாட்டின் மிகப் பெரிய எட்டக் ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக இருந்த நிலையில், இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக சரிந்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2024, 04:12 PM IST
  • பைஜூவின் நிறுவனர் ரவீந்திரனுக்கு பெரும் அதிர்ச்சி.
  • ரவீந்திரனின் சொத்து மதிப்பு இப்போது பூஜ்ஜியமாக சரிந்துள்ளது
  • ஓராண்டுக்கு முன்பு ரவீந்திரனின் சொத்து மதிப்பு ரூ.17545 கோடியாக இருந்தது.
₹17,545 கோடியிலிருந்து... பூஜ்ஜியமாக சரிந்த பைஜூஸ் ரவீந்திரனின் சொத்து மதிப்பு! title=

Net Worth of Byju's  Raveendran: நாட்டின் மிகப் பெரிய எட்டக் ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக ($2.1 பில்லியன்) இருந்த நிலையில், இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக சரிந்துள்ளது. இதனால், எட்டெக் நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பைஜூஸ் நிறுவனத்தில் நிலவும் பணத்தட்டுப்பாடு காரணமாக நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.  நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கூட கிடைக்கவில்லை. 

ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில், அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக மதிப்பிடப்பட்டுள்ளது. பைஜு ரவீந்திரன் ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்தார். ஓராண்டுக்கு முன்பு இவரது சொத்து மதிப்பு ரூ.17,545 கோடியாக இருந்த நிலையில், இப்போது ஃபோர்ப்ஸ் பில்லியனர் இன்டெக்ஸ் 2024  என்னும் உலக பணக்காரர்கள் பட்டியலில், பைஜுஸ் ரவீந்திரனின் (Byju's Raveendran) சொத்து மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, கடந்த ஆண்டு பட்டியலுடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு, அதில் இருந்த 4 பேர் மட்டுமே வெளியேறியுள்ளனர். அவர்களில் ஒருவர் பைஜுஸ் ரவீந்திரன். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்த நெருக்கடிக்குப் பிறகு, எட்டெக் நிறுவனமான பைஜூவின் சொத்து மதிப்பீட்டை $22 பில்லியனில் இருந்து $1 பில்லியனாகக் குறைந்தது.

பைஜூஸ் நிறுவனம் 2011 ஆண்டில் நிறுவப்பட்டது.  மிக வேகமாக  முன்னேறிச் சென்ற எட்டெக் நிறுவனம், கொரோனா தொற்று நோய் காலகட்டத்தில், அதன் வணிகம் மிக வேகமாக வளர்ந்தது. 2022 ஆம் ஆண்டில்,  22 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பைஜூஸ் நிறுவனம் எட்டியது. 

மேலும் படிக்க | Byju's நிறுவன நெருக்கடி.. CEO ரவீந்திரனை வெளியேற்ற பங்குதாரர்கள் முடிவு...!

பைஜூஸ் நிறுவனம் அமெரிக்காவிலும் கால்பதித்து வணிகத்தை . ஆனால் இதற்குப் பிறகு நிறுவனம் தொடர்ந்து அதிர்ச்சிகளை சந்தித்து வந்தது. இதையடுத்து பைஜு ரவீந்திரனுக்கும், அந்த நிறுவனத்தின் சில முதலீட்டாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 2024 ஜனவரியில் இருந்தே தனது ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை தற்போது பைஜுவால் ஏற்பட்டுள்ளது. தவிர, நிறுவனத்தில் பணிநீக்கங்கள் தொடர்கின்றன.

பைஜூஸ் நிறுவனம் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்களை அடுத்து, ரவீந்திரனின் வீடு உட்பட நிறுவனத்துடன் தொடர்புடைய பல இடங்களில், கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, கடந்த 2011 முதல் 2023 வரை சுமார் ₹ 28,000 கோடிக்கும் அதிகமான அளவில் அந்நிய முதலீடுகளை பெற்றிருப்பது தெரியவந்தது. மேலும் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில், சுமார் ₹ 9500 கோடியை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க பைஜூஸ் நிறுவனம் தவறியதை அடுத்து, அந்நிய செலாவணி மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

நிதி கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்ய தவறியது, கடனுக்கான வட்டி தொகையை செலுத்தாதது என பல வகையில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, பைஜூஸ் நிறுவனம் கடும் சவால்களை சந்திக்க தொடங்கியது. செலவினங்களை கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வாடகைக்கு கூட செலுத்த முடியாத நிலையில், பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்யும் நிலைக்கு பைஜூஸ் நிறுவனம் தள்ளப்பட்டது.

மேலும் படிக்க | லோக்சபா தேர்தல் 2024: உங்கள் ஒரு ஓட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News