Investment: தமிழ்நாட்டில் ₹6180 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய் மோட்டர்ஸ்! முழு விவரங்கள்
Hyundai India Investment: ஹூண்டாய் இந்தியாவின் மிகப்பெரிய திட்டம்! ₹6180 கோடி முதலீடு செய்யப்படும், EV மீது தனிக் கவனம் செலுத்தும் நிறுவனம்
Global Investors Meet: ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) திங்களன்று, மின்சார வாகனங்கள் மற்றும் பிறவற்றிற்காக முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ.20,000 கோடி முதலீட்டைத் தவிர, 2023-2032 ஆம் ஆண்டுக்குள் ரூ.6,180 கோடியை தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது. முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், மின்சார வாகனம் (EV) பேட்டரி மற்றும் கார் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளுக்கு ரூ.6,180 வழங்க உறுதியளித்துள்ளது.
நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தகவல் அளித்துள்ளது. வரும் காலங்களில் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தமிழகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்யவுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நிறுவனம் மாநிலத்தில் ரூ.6180 கோடி முதலீடு செய்ய உள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) 2023-2032 க்குள் தமிழ்நாட்டில் ரூ.6,180 கோடி முதலீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக மின்சார வாகனங்கள் மற்றும் பிறவற்றிற்காக முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ.20,000 கோடி முதலீட்டைத் தவிர இது கூடுதல் முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.
6180 கோடி ரூபாய் முதலீடு
இந்திய தொழில்நுட்பக் கழகம்-மெட்ராஸுடன் இணைந்து பிரத்யேக 'ஹைட்ரஜன் வேலி இன்னோவேஷன் ஹப்' (Hydrogen Valley Innovation Hub) திட்டத்திற்காக ஹூண்டாய் மோட்டார் ரூ.180 கோடி செலவு செய்யும்.
ஹைட்ரஜன் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பில் கவனம்
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கணிசமான முதலீடு, மாநிலத்தில் சமூக-பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும், நாட்டை தன்னிறைவு பெறுவதற்காக தமிழ்நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும்உதவியிஆக இருக்கும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உன்சூ கிம் கூறுகையில், மாநில அரசாங்கத்துடனான இந்த ஒத்துழைப்பு என்பது முதலீட்டுக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்தார். நிலைத்தன்மை மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வலுவான ஹைட்ரஜன் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பாக இந்தியாவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அப்பால், தமிழ்நாடு அரசு ஹூண்டாய் நிறுவனத்துடன் "புதிய பகுதிகளில்" சாத்தியமான முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்காக பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் வர்த்தக வாகனங்கள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு என பல்வேறு விஷயங்களில் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய் க்ரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு
நாட்டில் அதிகம் விற்பனையாகும் நடுத்தர அளவிலான எஸ்யூவியான ஹூண்டாய் க்ரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய க்ரெட்டா தொடர்பான பல புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளது. நிறுவனம் தனது முன்பதிவுகளை பெறத் தொடங்கிவிட்டது. 25000 ரூபாய் டோக்கன் பணத்தில் காரை முன்பதிவு செய்யலாம்.
புதிய க்ரெட்டாவில் ADAS லெவல் 2ஐ வாடிக்கையாளர்கள் பெறப் போகிறார்கள் என்று நிறுவனம் கூறுகிறது. இது தவிர, சரவுண்ட் வியூ மானிட்டர் (Surround view monitor (SVM), பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் (Blind spot view monitor (BVM), டூயல் சோன் ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல் (Dual Zone Automatic Temperature control) போன்ற அம்சங்களும் இந்த காரில் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ