உலக முதலீட்டாளர்கள் மாநாடு: கோடி கோடியாய் தமிழகத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்ட்!

World Investor Meet 2024 In Tamil Nadu: உலக முதலீட்டாளர்கள் மாநாடு, இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 7, 2024, 12:46 PM IST
  • உலக முதலீட்டாளர் மாநாடு 2024 சென்னையில் நடந்தது.
  • பல உலக நிறுவனங்கள் தமிழகத்தில் கோடிகோடியாய் முதலீடு செய்துள்ளனர்.
  • எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த மாவட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்?
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: கோடி கோடியாய் தமிழகத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்ட்! title=

சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில், இன்றும் நாளையும் (ஜனவரி 7,8) உலக முதலீட்டாள்ர் மாநாடு நடைபெறுகிறது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையோடி, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இதற்கான ஒரு முயற்சியாக இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல உலக நாடுகள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன. இன்றைய நிகழ்வில், பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், கோடிக்கணக்கில் தமிழ்நாட்டின் சில முக்கிய மாவட்டங்களில் தொழில் ரீதியாக முதலீடு செய்துள்ளது. அந்த நிறுவனங்களின் பட்டியலையும், அவர்கள் எத்தனை கோடியை எந்தெந்த மாவட்டங்களில் முதலீடு செய்கிறார்கள் என்பதையும் இங்கு பார்ப்போம். 

மேலும் படிக்க | தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீடு... வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் - முழு பின்னணி இதோ!

தமிழகத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்ட்..

>அடிடாஸ், போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து முன்னரே அறிவித்திருந்தன. அந்த வகையில், இன்று இதற்கான ஒப்ப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

>டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் போட்டி நிறுவனமாக கருதப்பட்ம் நிறுவனம், வின்ஃபாஸ்ட். வியட்நாமை சேர்ந்த இந்த நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில், ரூ.16 கோடி வரை முதலீடு செய்துள்ளது. 

>கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ 1,100 கோடியை முதலீடு செய்துள்ளது. கூடுதலாக தமிழகத்தில் 6,180 கோடியை இந்த நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. 

>Qualcomm என்ற நிறுவனம் 177 கோடி முதலீடு செய்துள்ளது. கூடுதலாக, 1,600 பேருக்கு வேலை வாய்ப்பையும் இந்த நிறுவனம் வழங்க உள்ளது. 

>அமெரிக்க நிறுவனமான First Solar நிறுவனம், தமிழகத்தில் 2,500 கோடியை முதலீடு செய்துள்ளது. 

>கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project  நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது. இந்த நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 515கோடியை முதலீடு செய்துள்ளது. மேலும், இவர்களின் நிறுவனத்தில் 350 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,600 கோடியையும் முதலீடு செய்துள்ளது. 

>டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 12,082 கோடியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலீடு செய்துள்ளது. மேலும், 40,500 பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்க உள்ளது, 

>பெகட்ரான் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,000 கோடியை முதலீடு செய்துள்ளது. மேலும், 8,000 பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்க உள்ளது.

>JSW நிறுவனம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 12,000 கோடியை முதலீடு செய்துள்ளது. மேலும், 6,600 பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்க உள்ளது. 

>Mitsubishi நிறுவனம், 200 கோடியை கும்மிடிப்பூண்டியில் முதலீடு செய்துள்ளது. 

>சிங்கப்பூரை சேர்ந்த AP Moller Maersk என்ற நிறுவனம், தமிழகத்தில் பல கோடிகளை முதலீடுசெய்துள்ளது. 

>டிவிஎஸ் நிறுவனம் 5,000 கோடியை முதலீடு செய்துள்ளதோடு, 500 பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்க உள்ளது. 

மேலும் படிக்க | Kalaignar 100: நான் நெருப்பு இல்லை... செருப்பு - ரஜினியிடம் சொல்லிய கலைஞர் - நினைவுக்கூர்ந்த கமல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News