தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீடு... வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் - முழு பின்னணி இதோ!

Tamil Nadu Latest News: தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிக்கும் நிறுவனம் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 6, 2024, 08:50 PM IST
  • தென்தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல் - ஸ்டாலின்
  • இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள் - ஸ்டாலின்
  • பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீடு... வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் - முழு பின்னணி இதோ! title=

Tamil Nadu Latest News: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நாளையும், நாளை மறுநாளும் (ஜன 7, 8) 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு' (Tamil Nadu Global Investors Meet 2024) நடைபெற உள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டிற்கு அதிக முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்புள்ளது என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், VinFast என்ற மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அதன் ஆலையை அமைக்க இங்கு முதலீடு செய்ய இருப்பது உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு அரசும், VinFast நிறுவனமும் இதுசார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

16,000 கோடி முதலீடு

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பதிவில்,"உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் மின்சார கார்கள் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்க உள்ளது. 

இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல். தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் VinFast நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024இல் (TNGIM 2024) இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அடிச்சு தூக்கப்போகும் மழை... 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட், 12 மாவட்டங்களில் கனமழை!

எவ்வளவு முதலீடு?

இந்நிலையில், தூத்துக்குடியில் VinFast நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்ய உள்ளது, ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறது, இங்கு அவர்கள் தயாரிக்கப்போவது என்ன, அந்த தயாரிப்பு சூழலியலுக்கு நன்மை பயக்குமா, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் ஆகிய அனைத்தையும் அந்த நிறுவனமே அதன் இணையதளத்தில் செய்தி அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதன் தமிழாகத்தை இதில் காணலாம்.  

அந்த செய்தி அறிக்கையில்,"வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன (EV) உற்பத்தியாளரான VinFast நிறுவனமும், தமிழ்நாடு மாநில அரசும் இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. 

VinFast மற்றும் தமிழ்நாடு அரசு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான மொத்த முதலீட்டை நோக்கிச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதாவது, திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து ஐந்தாண்டுகள் வரை இந்த முதலீடு நீடிக்கும். இதன் மூலம், உலகின் மூன்றாவது பெரிய வாகனச் சந்தையில் VinFast நிறுவனத்தின் விரிவாக்கத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இது குறிக்கிறது" என குறிப்பிட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள்

மேலும், அதில்,"உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் வளர்ச்சி வாய்ப்புகளை கைக்கொள்வதையும், EV சந்தை வேகமாக விரிவடைவதையும் நோக்கமாக கொண்டு இங்கு முதலீடு செய்ய முன் வந்துள்ளோம். இந்த முன்முயற்சி, முக்கிய சந்தைகளில் வலுவான இருப்பை நிலைநிறுத்துவதற்கும், உலகளாவிய விரிவாக்கத்திற்கான அதன் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கும் VinFast மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

VinFast நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மின்சார வாகன வசதியை தமிழ்நாட்டில் நிறுவுவது உள்நாட்டில் சுமார் 3,000 - 3,500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைகளை உருவாக்குவது மற்றும் உள்ளூர் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதுடன், பாலின சமத்துவத்தை வளர்ப்பதற்கும் சமூகத்திற்கான தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை வழங்குவதற்கும் VinFast அர்ப்பணிப்புடன் உள்ளது.

EV கார்கள் தயாரிப்பு

தூத்துக்குடியில் அமைக்கப்பட உள்ள VinFast ஆலை, இப்பகுதியில் முதல் தர மின்சார வாகன உற்பத்தி மையமாக ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஆலையின் கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நன்மைகள் தவிர, புதிதாக பதிவுசெய்யப்பட்ட தனியார் கார்களில் 30% எலக்ட்ரிக் கார்களை இலக்காகக் கொண்டு, பசுமை போக்குவரத்து வளர்ச்சிக்கும் இந்த திட்டம் வழி வகுக்கும். இது போக்குவரத்துத் துறையில் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் மாநில அரசின் முன்முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது" என குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News