லெக்ஸ்மோட்டோ ஒரு சீன மோட்டார் சைக்கிள் பிராண்ட் ஆகும். இந்நிறுவனம் LXS 125 பைக்கை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லெக்ஸ்மோட்டோ LXS 125 பைக்கின் விலை சுமார் ரூ.2,26,774 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. LXS 125 சிறப்பான கிராபிக்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 10 லிட்டர் ஃபியூயல் டேங்க் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லெக்ஸ்மோட்டோ LXS 125 (Lexmoto LXS 125) இரட்டை LED ஹெட்லேம்ப்கள் மற்றும் இருக்கை முடிவின் கீழ் LED டெயில் லேம்பையும் பெறுகிறது. இந்த பைக்கில் (Bike) டிஜிட்டல் கருவி அமைப்பையும் கொண்டுள்ளது. இதில், 125 சிசி ஒற்றை சிலிண்டர், வாட்டர் கூல்ட் இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது, இது 8750 rpm இல் மணிக்கு 13.6 bhp ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது. 


ALSO READ | Bajaj Chetak vs TVSiQube: உங்கள் பணத்துக்கு நல்ல மதிப்பை அளிக்கும் Electric scooter எது?


லெக்ஸ்மோட்டோ LXS 125 பைக்கானது கேடிஎம் RC 125 பைக்கை விட 1.2 bhp ஆற்றலை குறைவாக உற்பத்தி செய்கிறது. ஆறு வேக கியர்பாக்ஸுடன் இதன் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 16 அங்குல சக்கரங்களுடன் இயங்குகிறது மற்றும் பைக்கின் சவாரி முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் ஷாக் அபிசார்பர் மூலம் கையாளப்படுகிறது. 


LXS 125 மாட் கிரே, ஃப்ளோரோ மஞ்சள் மற்றும் கருப்பு, நீலம் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது இரண்டு ஆண்டு பாகங்கள் மற்றும் தொழிலாளர் உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது. 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR