LIC IPO Opening Date: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) ஐ.பி.ஓ-வுக்காக காத்திருக்கும் ஏராளமான மக்களில் நீங்களும் ஒருவரானால் இந்த செய்தி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 2022க்குள் எல்ஐசியின் ஐபிஓ கண்டிப்பாக சந்தையில் வந்துவிடும் என்று எல்ஐசி அதிகாரிகள் கூறுகின்றனர். எல்ஐசியின் ஐபிஓ (LIC IPO) மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. ஐபிஓவின் வெளியீடு மார்ச் 15 ஆம் தேதி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


எல்ஐசி ஜனவரி இறுதிக்குள் வரைவோலையை சமர்ப்பிக்கும்


PTI இன் செய்தியின்படி, அரசாங்கம், ஜனவரி இறுதிக்குள் அதன் ஒப்புதலுக்காக சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI முன் வரைவோலையை முன்வைக்கும். ஜூலை-செப்டம்பர் 2021க்கான எல்ஐசியின் நிதித் தரவு இறுதி செய்யப்பட்டு வருவதாக இந்த விவகாரம் தொடர்பான அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார். இதுதவிர, நிதி வழங்கும் பணியும் நடந்து வருகிறது.


ALSO READ | LIC IPO அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாய் அமையும், முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும்


நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வர திட்டமிடப்பட்டுள்ளது


தகவல்களின்படி, எல்ஐசி (LIC) அதிகாரி கூறுகையில், ஐபிஓ தொடர்பான வரைவு திட்டம் இந்த மாத இறுதிக்குள் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) சமர்மிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறினார். நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் எல்ஐசியின் ஐபிஓ வெளிவரும் என்பது உறுதி. நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் இலக்கான ரூ.1.75 லட்சம் கோடியை அடைவதில் எல்ஐசியின் ஐபிஓ (lic ipo news) மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதுவரை, பல பொதுத்துறை நிறுவனங்களின் (PSU) பங்கு விலக்கல் மூலம் ரூ.9,330 கோடியை மட்டுமே அரசால் திரட்ட முடிந்துள்ளது.


10 வணிக வங்கியாளர்கள் நியமனம்


கடந்த செப்டம்பரில், நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஆரம்ப வெளியீட்டை நடத்துவதற்காக 10 வணிக வங்கியாளர்களை அரசாங்கம் நியமித்தது. கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டிகுரூப் மற்றும் நோமுரா ஆகியவை இதில் அடங்கும். 


அதே நேரத்தில், சட்ட ஆலோசகராக சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் பரிந்துரைக்கப்பட்டார். பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது. இன்றுவரை நாட்டின் மிகப்பெரிய ஐபிஓவாக இது கருதப்படுகிறது.


ALSO READ | LIC Best Saving Plans: இந்த ஒரே பாலிசியில் பல நன்மைகள் -முழு விவரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR