LIC Jeevan Akshay: இந்தியாவில் எல்ஐசி எனப்படும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தான் பெரும்பாலான மக்களின் முதன்மையன முதலீட்டு விருப்பமாக இருந்து வருகிறது.  இந்த அரசுக்குச் சொந்தமான நிறுவனம் மற்ற காப்பீட்டு நிறுவனங்களைக் காட்டிலும் பெரிய சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.  எல்.ஐ.சி வழங்கும் பாலிசிகளை எடுப்பது பாலிசிதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிலையான வருமானத்தை அளிக்கிறது. எல்ஐசி வழங்கும் சில பாலிசிகள் ஆயுள் காப்பீடுகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் ஆகும், இது பெரும்பாலான திட்டங்களைப் போலவே பாலிசிதாரர்களுக்கு ஓய்வூதியத்திற்கான கார்பஸை உருவாக்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Flipkart Big Savings Days: லேப்டாப்களில் 80 % தள்ளுபடி; இந்த பொருட்களை ரூ.49-க்கு வாங்கலாம் 



தற்போது எல்ஐசியின் ஜீவன் அக்ஷய் திட்டமானது மற்ற பாலிசிகளிலிருந்து வேறுபடுகிறது.  ஜீவன் அக்ஷய் திட்டத்தில் நீங்கள் ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் போதும், உங்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 வரை ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.  இதனால் உங்களுக்கு மாதம் மாதம் தவணை தொகை செலுத்தவேண்டிய அழுத்தம் எதுவும் இருக்காது.  இந்த திட்டத்தில் பாலிசிதாரரின் விருப்பத்தின் பெயரில் மாதந்தோறும், காலாண்டு அல்லது ஆண்டுதோறும் என ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.  குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 85 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பெறலாம்.


ஜீவன் அக்ஷய் திட்டத்தில் ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் தொகையை பிரீமியமாக செலுத்தி பாலிசியை எடுக்கலாம்.  இந்த திட்டத்தில் பாலிசிதாரருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 12,000 வரை கிடைக்கும் மற்றும் பாலிசியை வாங்கிய 90 நாட்களுக்குப் பிறகு கடனைப் பெறும் வசதி இதில் வழங்கப்படுகிறது.  மாதந்தோறும் ரூ.20,000 வரை ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் இந்த திட்டத்தில் மொத்தமாக ரூ.40 லட்சத்து 72 ஆயிரம் வரை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Flipkart Big Saving Days 2023: வெறும் ரூ.599-க்கு ஸ்மார்ட்போன்கள், பிளிப்கார்ட் அதிரடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ