புதிய ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் ஆகிய இரண்டு புதிய டெர்ம் அஷ்யூரன்ஸ் திட்டங்களை எல்ஐசி எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.  இந்த புதிய ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் ஆகிய இரண்டு திட்டங்களும் நான்-லிங்க்ட் மற்றும் நான்-பார்ட்டிசிபேட்டிங் திட்டங்களாகும்.  அதாவது இந்த திட்டத்தில் பாலிசிதாரர்கள் நிலையான ப்ரீமியங்களை செலுத்துவதன் மூலமாக சிறந்த வருமானத்தை பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.  பொதுவாக நான்-லிங்க்ட் திட்டம் என்றால் ஆபத்து இல்லாத மற்றும் பங்குசந்தையுடன் இணைக்கப்படாத உத்திரவாதமான வருமானத்தை தரக்கூடிய திட்டமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | PM Kisan eKYC: பிரதமர் கிசான் சம்மான் நிதி 13ம் தவணை வாங்க இதை செய்யுங்க



ஜீவன் அமர் திட்டமானது பாலிசிதாரர்களுக்கு லெவல் சம் அஷ்யூர்ட் மற்றும் இன்க்ரீஸிங் சம் அஷ்யூர்ட் போன்ற இரண்டு வகையான ஆப்ஷன்களை வழங்குகிறது.  இந்த திட்டத்தில் பாலிசிதாரர்கள் ஒற்றை பிரீமியம் அல்லது வழக்கமான பிரீமியம் செலுத்திக்கொள்ளலாம், இதுதவிர வரம்புடன் கூடிய கட்டண ஆப்ஷன்களும் இந்த திட்டத்தில் உங்களுக்கு வழங்கப்படுகிறது.  புதிய ஜீவன் அமர் திட்டம் பெண்களுக்கு பலவிதமான பிரீமியம் ஆப்ஷன்களை வழங்குகிறது.


ஒற்றை பிரீமியம் ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் ரூ.30,000 செலுத்த வேண்டும் மற்றும் வழக்கமான பிரீமியம் ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் ரூ.3000 செலுத்த வேண்டும்.  புகைபிடிப்பவர்கள் மற்றும் புகைபிடிக்காதவர்களுக்கென்று பிரீமியம் திட்டங்களும் வழங்கப்படுகிறது மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் வசதிகள் வழங்கப்படுகிறது.  18-65 வயத்துக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தை வாங்கலாம், இதன் மொத்த பாலிசி காலம் 10 முதல் 40 ஆண்டுகள் ஆகும்.  இந்த திட்டத்தில் அடிப்படை காப்பீட்டு தொகை ரூ.25,00,000 ஆக உள்ளது மற்றும் இந்த திட்டத்தில் நீங்கள் கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் விபத்து காப்பீட்டுக்கான நன்மையை பெறலாம்.


மேலும் படிக்க | ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ