ஓய்வூதியதாரர்களை குறிவைத்து பல போலி இணையதளங்கள் களமிறங்கியுள்ளது, 'வாழ்க்கைச் சான்றிதழ்' அல்லது 'ஜீவன் பிரமன் பத்ரா' வழங்குவதாக கூறி பதிவு கட்டணம் செலுத்த ஓய்வூதியதாரர்களை இந்த போலி இணையதளங்கள் கோருகின்றது.  இதுகுறித்து பிஐபி உண்மை கண்டறியும் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளது, "போலி இணையதளமான 'http://jeevanpraman.online' வாழ்க்கைச் சான்றிதழை வழங்குவதாகக் கூறி, பதிவுக் கட்டணம் என்கிற பேரில் ரூ.150 செலுத்த கோருகிறது" என்று தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் அனைத்து ஓய்வூதியதாரர்களும் அவர்களின் மாதாந்திர ஓய்வூதிய தொகையை பெற வாழ்க்கைச் சான்றிதழை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் போன்ற ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் (பிடிஏ) சமர்ப்பிக்க வேண்டும்.  அதேசமயம் 1995-ம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பிலிருந்து (இபிஎஃப்ஓ) ஓய்வூதியம் பெறும் தனியார் துறை ஊழியர்களுக்கு இதுபோன்ற காலக்கெடு எதையும் நிர்ணயிக்கவில்லை. இபிஎஃப்ஓ-ன் படி, இபிஎஸ் 95 ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜீவன் பிரமன் பத்ரா 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும், மேலும் அவர்கள் எந்த நேரத்திலும் இதனை சமர்ப்பிக்கலாம் மற்றும் இது சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாழ்க்கை சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் நேரடியாகவோ அல்லது டிஜிட்டல் முறையிலோ சமர்ப்பித்து கொள்ளலாம்.  இப்போது எந்தெந்த முறைகளின் மூலமாக வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்பது பற்றி பின்வருமாறு காண்போம்.



மேலும் படிக்க | சிறிய முதலீடு .... கை நிறைய லாபம் ! ஏழைகளுக்கான 4 வழிகள்


1) ஓய்வூதியதாரர்கள் ஜீவன் பிரமான் போர்ட்டல் அல்லது ஆப் மூலம் ஆன்லைனில் தங்களின் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.  இதற்கு ஓய்வூதியதாரர் யூஐடிஏஐ-ன் உபகரணங்களைப் பயன்படுத்தி தங்கள் கைரேகைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.


2) ஆதார் அடிப்படியில் அடிப்படையில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி, ஓய்வூதியம் பெறுவோர் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.


3) வாழ்க்கை சான்றிதழை டோர்ஸ்டெப் பேங்கிங் அலையன்ஸ் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம், இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


4) தபால் துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,  தபால்காரர் மூலம் வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் சேவையை வழங்கியுள்ளது.  இதற்கு ஓய்வூதியதாரர் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து postinfo செயலியைப் டவுன்லோடு செய்ய வேண்டும்.


5) மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் பிடிஏ-ல் அதிகாரிகளிடம் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைப் சமர்ப்பிக்கலாம்.


மேலும் படிக்க | Money Tips! உங்களை லட்சாதிபதியாக ஆக்கும் அரிய ‘20’ ரூபாய்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ