மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் வேண்டுமா? ரூ.200 முதலீடு செய்தால் போதும்!

NPS Scheme: என்பிஎஸ் திட்டத்தில் அரசாங்கத் துறை ஓய்வூதிய நிதி, கார்ப்பரேட் துறை ஓய்வூதிய நிதி மற்றும் மாற்று முதலீட்டு நிதி உட்பட பல ஓய்வூதிய நிதிகள் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jan 4, 2023, 10:18 AM IST
  • தேசிய ஓய்வூதிய அமைப்பு கீழ் ஓய்வூதியம் பெறலாம்.
  • இதில் வரி சலுகையும் பெறலாம்.
  • ரூ.50,000 வரை கூடுதல் வரி விலக்கு கோர முடியும்.
மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் வேண்டுமா? ரூ.200 முதலீடு செய்தால் போதும்! title=

NPS Scheme: என்பிஎஸ் எனப்படும் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் அரசால் செயல்படுத்தப்படும் ஒரு    ஓய்வூதியத் திட்டமாகும்.  இந்த திட்டத்தின் மூலம் தனிநபர்கள் தங்களது ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான வருமானத்தை மாதந்தோறும் ஓய்வூதியமாக பெறமுடியும்.  இந்த என்பிஎஸ் திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் ரூ.50,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என விரும்பினால், இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.200 முதலீடு செய்ய வேண்டும்.  என்பிஎஸ் திட்டத்தில் சேர்ந்துகொள்ள விரும்புபவர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (என்பிஎஸ் ட்ரஸ்ட்) இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்.  இதற்கான பதிவு செயல்முறையை நிறைவு செய்ய மக்களுக்கு பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ் (பிஓபி) அல்லது பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ் - சர்வீஸ் புரோவைடர் (பிஓபி-எஸ்பி)  உதவிகரமாக இருக்கிறது.

மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ 50 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா!

என்பிஎஸ் திட்டத்தை திறந்ததும் நீங்கள் உங்களுக்கான ஓய்வூதிய நிதி மற்றும் முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப முதலீடு செய்ய தொடங்கலாம்.  என்பிஎஸ் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக உங்களுக்கு வரிச் சலுகைகள், நெகிழ்வுத்தன்மை மற்றும் நிதிகளின் தொழில்முறை மேலாண்மை போன்ற நன்மைகள் கிடைக்கப்பெறும்.  என்பிஎஸ் திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டத்தின் 80சிசிடி (1பி) பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.50,000 வரை தனிநபர் வரி விலக்கு கோரலாம்.  மேலும் இந்த திட்டத்தில் உங்கள் முதலாளி பங்களித்திருந்தால் அவர் பிரிவு 80சிசிடி (1சி)-ன் கீழ் ஆண்டுக்கு ரூ.50,000 வரை கூடுதல் வரி விலக்கு கோர முடியும்.

என்பிஎஸ் திட்டத்தில் அரசாங்கத் துறை ஓய்வூதிய நிதி, கார்ப்பரேட் துறை ஓய்வூதிய நிதி மற்றும் மாற்று முதலீட்டு நிதி உட்பட பல ஓய்வூதிய நிதிகள் உள்ளது.  என்பிஎஸ் திட்டத்தில் சுயதொழில் செய்பவர்கள், சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் உட்பட இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் முதலீடு செய்யலாம்.  இந்த திட்டத்தில் சேர்பவர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் மற்றும் இதில் அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.  25 வயதுடைய ஒரு நபர் இந்த திட்டத்தில் தினமும் ரூ.200 என்கிற கணக்கில் முதலீடு செய்கிறார் என்றால் அவரது 60 வயதில் அவருக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.  அவர்களது சராசரி ஆண்டு வருமானம் 8 சதவிகிதம் எனில் முதலீட்டாளர் ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு ரூ.50,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.

மேலும் படிக்க | ஒரே நாளில் இவ்வளவு புக்கிங்கா? புத்தாண்டில் OYO-வில் குவிந்த கூட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News