Life Certificate: மாதா மாதம் ஓய்வூதியம் பெறும் நபரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் ஓய்வூதியதாரர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். இந்த மாதம், அதாவது நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அவர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Jeevan Pramaan Patra


ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிய இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. இந்த நிலையில், ஓய்வூதியம் நிறுத்தப்படுவதையோ, அல்லது ஓய்வூதியம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதையோ தவிர்க்க, ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஜீவன் பிரமான் பத்ரா எனப்படும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுவோர் வங்கிக் கிளைகளுக்குச் சென்று இதை சமர்ப்பிக்கலாம். அல்லது, வீட்டிற்கே வந்து அளிக்கபப்டும் சேவையான டோர்ஸ்டெப் வங்கிச் சேவைகளைத் (Doorstep Banking)  தேர்வுசெய்யலாம். இதுமட்டுமின்றி, ஆன்லைனில் சமர்ப்பிக்க ஜீவன் பிரமான் செயலியைப் பயன்படுத்தலாம்.


Pensioners: ஆயுள் சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?


ஆயுள் சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், அடுத்த மாதங்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். மத்திய ஓய்வூதியச் செயலாக்க மையங்களில் (CPPC) சான்றிதழைப் பெற்று, அடுத்த ஓய்வூதியச் சுழற்சியில் செயலாக்கப்பட்டவுடன்தான் ஓய்வூதிய பணம் (Pension) செலுத்துதல் மீண்டும் தொடங்கும்.


மேலும் படிக்க | PF கணக்கில்... அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவது எப்படி... EPFO விதிகள் கூறுவது என்ன...


Senior Citizens: ஆயுள் சான்றிதழை யார் சமர்ப்பிக்க வேண்டும்


- ஏறக்குறைய 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் (Central Government Pensioners) ஒவ்வொரு ஆண்டும் தங்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை செயலில் வைத்திருக்க தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.


- 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி சமர்ப்பிப்பு சாளரம் தொடங்கப்படுகிறது.


- இவர்களது வயதை கருத்தில் கொண்டு இந்த செயல்முறையை முடிக்க இவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.


- மற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த செயல்முறை நவம்பர் 1 முதல் தொடங்குகிறது. 


- அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதிய தொகை பெறுவதில் இடையூறு ஏற்படாமல் இருக்க நவம்பர் 30 காலக்கெடுவுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்.


ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதில் தாமதங்கள் அல்லது சிக்கல்கள் எற்பட்டால் என்ன செய்வது?


- ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதில் தாமதங்கள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் வழங்கும் நிறுவனம் அல்லது வங்கியின் ஓய்வூதியம் செலுத்தும் கிளையை அணுகலாம்.


- தீர்க்கப்படாத சிக்கல்களுக்கு, வங்கி குறைதீர்ப்பாளரை தொடர்புகொள்வது நல்லது.


- இது குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், வாழ்க்கைச் சான்றிதழின் சரியான நேரத்தில் செயலாக்கத்தை உறுதி செய்வதற்கும் உதவும்.


ஆயுள் சான்றிதழ் நிராகரிப்பட்டால் என்ன செய்வது?


- தவறான விவரங்கள் காரணமாக உங்கள் வாழ்க்கைச் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால், தவறான தகவல் மற்றும் பயோமெட்ரிக்ஸை சரிசெய்து, புதிய சான்றிதழை உருவாக்கலாம். 


- சிக்கலைத் தீர்ப்பதில் உதவி பெற ஓய்வூதியம் வழங்கும் முகமையைத் (PDA) அணுகவும்.


மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாமல் இருந்தால், மீண்டும் ஓய்வூதிய தொகையை பெற ஆரம்பிக்க, ஓய்வூதியம் பெறுவோர் மத்திய ஓய்வூதியக் கணக்கியல் அலுவலகத்திலிருந்து (CPAO) ஆர்டர்களைப் பெற வேண்டும்.


மேலும் படிக்க | உங்கள் கணக்கில் EPF வட்டித்தொகை வந்துவிட்டதா? ஆன்லைனில் எளிதாக இப்படி செக் செய்யலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ