)
EPFO Interest: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. உங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) கூடுதல் தொகை வரவுள்ளது. இபிஎஃப் வட்டித் தொகை குறித்து முக்கிய புதுப்பிப்பு வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. நிறுவனம் பங்களிக்கும் தொகையில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிலும், ஒரு பகுதி இபிஎஸ் கணக்கிலும் செல்கிறது. பணி ஓய்வுக்குப் பிறகு, ஊழியர் இந்தத் தொகையில் ஒரு பகுதியை மொத்தத் தொகையாகவும், மற்றொரு பகுதியை ஓய்வூதியமாகவும் பெறுகிறார்.
இபிஎஃப் வட்டி (EPF Interest)
இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers), அவர்களது கணக்கில் சேர்ந்துள்ள தொகைக்கு அரசாங்கம் நல்ல வட்டியையும் அளிக்கின்றது. தற்போது இபிஎஃப் தொகைக்கு (EPF Amount) அரசாங்கம் 8.25 சதவீத வட்டியை அளிக்கின்றது. இது மற்ற திட்டங்களை விட அதிகமாகும். அரசாங்கம் இந்த வட்டி விகிதத்தில் அவ்வப்போது பல மாற்றங்களையும் செய்கிறது.
EPFO ஊழியருக்கு ஆண்டு வட்டியை வழங்குகிறது
EPFO ஊழியர்களுக்கு வருடாந்திர வட்டி பணத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டித் தொகை EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. EPFO உறுப்பினர்கள் நீண்ட காலமாக அரசாங்கத்திடம் இருந்து வட்டி பெறுவதற்காக காத்திருக்கிறார்கள். அரசாங்கம் தற்போது வட்டித் தொகையை வெளியிட்டுள்ளது. பலரது கணக்கில் வட்டித் தொகை (Interest Amount) டெபாசிட் செய்யப்பட்டு விட்டது.
இபிஎஃப் கணக்கில் வட்டித் தொகை வந்துவிட்டதா? உங்கள் கணக்கில் அதை எப்படி செக் செய்வது? வீட்டி இருந்தபடியே இதை செய்யலாம். இதற்கு நீங்கள் சில எளிய செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்.
ஆன்லைன் முறையில் உமங் செயலி மற்றும் இபிஎஃப்ஓ போர்டல் மூலமாகவும், ஆஃப்லைனில் மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் இதை தெரிந்துகொள்ளலாம்.
EPF Balance Check by through UMANG App: இபிஎஃப் இருப்பை உமங் செயலி மூலம் செக் செய்யும் முறை
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் UMANG செயலியை நிறுவவும்.
- இதில் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் கொண்டு லாக் இன் செய்ய வேண்டும்.
- இப்போது திரையில் காணப்படும் 'View Passbook' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதன் பிறகு பிஎஃப் கணக்கின் இருப்பு திரையில் தெரியும்.
- டெபாசிட் செய்யப்பட்ட தொகை மற்றும் தேதியையும் இப்போது பார்க்கலாம்.
EPF Balance Check by through EPFO Portal: இபிஎஃப் போர்டல் மூலம் செக் செய்யும் முறை
- EPFO இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்லவும்.
- EPFO போர்ட்டலில் பணியாளர்கள் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது நீங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல் உதவியுடன் லாக் இன் செய்ய வேண்டும்.
- லாக் இன் செய்த பிறகு, ‘உறுப்பினர் பாஸ்புக்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- உங்கள் கணக்கின் பாஸ்புக்கைப் பார்க்க, நீங்கள் மீண்டும் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
- அதன் பிறகு உறுப்பினர் பாஸ்புக் திரையில் தோன்றும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ